தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.
குறுந். 25
எனவும் வரும். அநுவாதமுகத்தான் அது கேட்ட தோழி இயற்பழித்து
உரைத்தலும் வரப்பெறும்.
[தலைவன் என்னைக் கூடியகாலையில் சாட்சி யாரும் இல்லை;
அவனே
சாட்சியாவான். அவனே என்திறத்துப்
பொய் கூறுவான் ஆயின்,
என்னால்
செய்யத்தக்க செயல் ஒன்றும் இல்லை. தினைக்கதிரின் தண்டு
போன்ற சிறிய கால்களை உடையதாய் ஓடும் நீரில் ஆரல் மீனை
உணவுக்காகத் தேடிக்கொண்டிருந்த நாரை
ஒன்று பக்கலில் இருந்தது;
கொலைத் தொழிலில்
முனைந்திருந்த அதுவும் நமக்குக் கரிபகராது.
‘கள்வன்’ என்ற பாடத்திலும் களவன் என்ற பாடமே சிறத்தல் காண்க.]
தோழி இயற்பழித்தல்:
மழவே துறந்து மறந்தவர் போல்தஞ்சை வாணன்வென்றி
முழவுஏய முந்நீர் முழங்குஇருங் கானல் முழுதுஉலகும்
தொழவே தகும்தெய்வம் நோக்கிச்செல் லேன்என்று சொல்லியும்நீ
அழவே துறந்தன ரே நல்லர் நல்லர்நம் ஆடவரே.
தஞ்சை. 292
எனவும்,
[குழந்தையை விட்டுப் பிரிந்து பின் மறக்கும் கொடியவர் போலத்
தஞ்சைவாணன் கடற்கரைச் சோலையிலே
உலகம் முழுதும் தொழும்
தெய்வத்தை முன்னிட்டு ‘நின்னின் பிரியேன்’ என்று சூளுறவு கூறிய
பின்னும்,
நீ அழுமாறு பிரிந்து சென்ற நம் தலைவன் நல்லன்! நல்லன்!!]
|