அகத்திணையியல்--நூற்பா எண் 161555

தலைமகள் இயற்பட மொழிதல்:


      அடம்புஅமர் நெடுங்கொடி உள்புதைந்து ஒளிப்ப
      வெண்மணல் விரிக்கும் தண்ணந் துறைவன்
      கொடியன் ஆயினும் ஆக
      அவனே தோழிஎன் உயிர்கா வலனே.

ஐங். தனி. 6
 

எனவும்,

    [அடப்பங்கொடி தன்னுள் புதைந்து மறையுமாறு வெள்ளிய மணல்
குவியலாக விரியும் தலைவன் கொடியன் ஆயினும், அவன் அல்லனோ
என் உயிர்த்துணைவன்!]


தெய்வம் பொறைகொளச் செல்குவம் என்றல்:


மாதங்கம்நல்கும்கைவாணன் தென்மாறைவை யைத்துறைவர்
ஏதம் பயந்திலர் எங்கட்கு நீஎம் இகந்ததனால்
கோதம் படாதி கொடுந்தெய்வ மேஎன்று கூர்பலி தூஉய்ப்
பாதம் பரவநல் லாய்இரு வேமும் படர்குவமே.

தஞ்சை 294

எனவும்,

      [தோழி ‘இரப்போருக்கு யானைகளையே கொடுக்கும்
கொடைத்தொழிலைஉடைய வாணன் தென்மாறை வையைத் தலைவன்
எங்கட்குத் தீங்கு தரவில்லை; தெய்வமே! எம்மைப் பிரிந்தமைக்காகத்
தலைவனுக்குத் தீங்கு தாராதே’ என்று தெய்வத்திற்குப் பலிதூவி
அதன்பாதங்களைப் பரவுதலுக்கு நாம் இருவேமும் செல்வேம்.]
 

இல்வயின் செறித்தமை சொல்லல்:
 

கொன்னே வெகுண்டு மணிவண்டல் ஆடக் கொடிமருங்குல்
பொன்னேஇனிப்புறம்போகல்என்றாள்அன்னை பூந்தொடிக்கை
மின்னே பசந்தஎன் மேனியும்பார்த்துள்ளம்வெய்துயிர்த்தாள்
என்னே விளைந்ததுஎன் னேஅறியார் அனபர் ஈங்குஒன்றுமே.

அம்பி. 344


எனவும்
,