556இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

       [தோழி! தாய் என்னைக் ‘கொடிபோன்ற இடையை உடைய பொன்னே’ என்று அழைத்து, என்னிடம் கோபம் கொண்டு, ‘இனி விளையாடுவதற்காக வீட்டிற்கு வெளியே செல்லாதே’ என்றாள்; மேலும் பசலைபாய்ந்த என் உடலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள்; இங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றனையும் நம்தலைவன் அறியாது உள்ளானே.]


செவிலி கனைஇருள் அவன் வரக் கண்டமை கூறல்:


யாய்இன்று எனக்கு மணிமுன்றில் வாய்நென்னல்எல்லி அல்லி
வாய்ஒன்று தேன்உமிழ் மாதவிப் பந்தரில் வார்கழற்கால்
சேய்ஒன்றி நின்ற திறம்அறி யாமல் செறிஇருட்கண்
பேய்ஒன்றுகண்டுஅஞ்சினேன்என்றுகூறினள்பெய்வளையே


அம்பி. 345

எனவும் வரும்

      [தோழி! தாய் நேற்று இரவு தேன் பிலிற்றும் மாதவிப் பாங்கர்
தலைவன் இரவுக்குறிக்கு வந்து நின்ற செயலை அறியாமல், செறிந்த
இருட்கண் பேய் ஒன்று கண்டு அஞ்சினேன் என்று இன்று வீட்டுவாயிலின்
முன்னிடத்தில் என்னிடம் குறிப்பிட்டாள்]

      இவற்றுள் கலுழ்தற் காரணம் கூறலாகிய ஒன்றும் ஒழித்து ஏனைய
எல்லாம், பாங்கி வினவாது ஒழியவும் தலைமகள் அறத்தொடு நிலைக்கு
உரியவாமாறு அறிந்து கொள்க.

      அநுவாத முகத்தான், எறிவளை வேற்றுமைக்கு ஏது வினாவலும்
வெறி விலக்கலும் வெறி விலக்கியவழி வினாதலும் ஈண்டே வரப்பெறும்
எனக் கொள்க.


செவிலி தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல்:
 

வேய்இன மென்தோள் மெலிந்துஒளி வாடி விழிபிறிதாய்ப்
பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செவ்வி