ஆயின ஈசன் அமரர்க்கு அமரன்சிற் றம்பலத்தான்
சேயினது ஆட்சியில் பட்டன ளாம்இத் திருந்திழையே.
திரு 282
எனவும்,
[வேய்போன்ற மென்தோள் மெலிந்து ஒளிகெட்டுக் கண் ஒளிமாறித்
தலைவி
பழைய வனப்பினை இழந்து
விட்டாள்; இதன்காரணம் செம்மேனி
அம்மானாம் சிற்றம்பலத்தான் மகனாகிய முருகனுடைய ஆளுகையின்கீழ்ச்
சூர்க்கோட் பட்டாள்போலும்.]
வெறி விலக்கல்:
கடவுள் கற்சுனை அடைஅவிழ்ந்து அமைந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடும் நாடன்
மார்புதர வந்த படர்மலி அருநோய்
நின்அணங்கு அன்மை அறிந்தும் மாணாது
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே.
நற் 34
எனவும்,
[சுனைப்பூக்களோடு செந்நிறக்காந்தளை வனப்புறக்கட்டிச் சூட்டித்
தெய்வம்
ஏறின தேவராட்டி மலைப்பகுதி
வனப்புறும்படி அருவி ஒலியையே
வாத்திய
ஒலியாகக் கொண்டு ஆடும் வெற்பனுடைய மார்பு தருதலான் வந்த
நினைத்தல் மிக்க வேற்று மருந்துகளால் தீர்த்தற்கு அரிய காமநோய்
நின்னால் தரப்பட்டது அன்று
என்பதை அறிந்தும், கடம்ப
|