558இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

மாலை சூடி வேலன் வேண்டியதனால் அவன் வெறியாடும் இடத்திற்கு வந்த
முருகனே! நீ தெய்வம் ஆயினும் இச் செயற்கண் மடமை உடையை
ஆயினாய்.]


வெறி விலக்கியவழிச் செவிலி தோழியை வினாதல்:


மண்குன்ற வந்த கலியினை மாற்றிய வாணன் தஞ்சை
ஒண்குன்ற மங்கையர் முன்னர்மின் னேஉமை யாள்மகனைப்
பண்குன்ற வென்றசொல் வள்ளிதன் கோனைப்பைந் தார்அயிலால்
வெண்குன்றுஎறிந்தசெவ்வேளைஇவ்வாறுஎன்விளம்பியதே.


தஞ்சை. 299

எனவும்,

       [மின்னே! உலகைக் கெடுக்கவந்த வறுமையை மாற்றிய வாணன்
தென்மாறைமலையில் வாழும் மங்கையர்முன்னே, உமையாள் மைந்தனும்,
பண்ணை வென்ற இன்சொல் வள்ளி மணாளனும், குருகு பெயரிய
குன்றத்தை வேலால் பிளந்தவனும் ஆகிய முருகப்பெருமானை நீ இங்ஙனம்
‘முருகே! நீ மன்ற மடவை' என்று குறிப்பிட்ட காரணம் யாது?]
 

தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்:
 

போர்உறை தீக்கணை போலும்நின் கண்கண்டு போதஅஞ்சி
நீர்உறை நீலமும் நீயும்நண் பாகஎன்று நின்மகட்குஓர்
தார்உறை தோளவர் தந்தனர் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ்
கார்உறை சோலையில் யாம்விளை யாடிய காலையிலே

 

தஞ்சை. 300

எனவும்,

      [வாணனுடைய தஞ்சையை அடுத்த மேகம் தங்கும் சோலையில்
தோழியும் யானும் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், ‘கொடிய அம்பு
போன்ற உன் கண்களைக் கண்டு மிகவும் அஞ்சித் தண்ணீரிலேயே தங்கிக்

கிடக்கும் நீலமலரும் நீயும் நண்பர் ஆகுக என்று உன் மகட்கு,
மாலைதங்கும் மார்பினை உடைய தலைவன் ஒரு நீலப்பூவினை
வழங்கினான்; பூத்தந்த அவனை மணத்தலை அவள் கருதுகின்றாள்.]