| 
 
புனல்தரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்: 
 
ஒழிதோற்றியசொல்லிஉன்மகள்ஓதிக்கு உடைந்தகொண்டல் 
பொழிதோல் திரள்உந்தி வந்தசெந் நீர்உந்திப் பொற்பினுக்குஓர் 
சுழிதோற்றிடும்பகை தீர்கின்றபோது ஒருதோன்றலும்அவ் 
வழிதோற்றி வந்துஎடுத் தான்தஞ்சை வாணன்தென் வையையிலே 
தஞ்சை. 301 
 
எனவும், 
 
      
[தஞ்சைவாணன் தென்வையையிலே மற்றவர் கூற்றினை வெல்லும் 
இன்சொல்லையுடைய தலைவியின் தலைமயிர் 
அழகுக்குத் தோற்ற மேகம் 
பொழிய, யானைகளையும் அடித்துக் கொண்டுவந்த செந்நீர் வெள்ளம், தன் 
நீர்ச்சுழி தலைவியின் கொப்பூழுக்கு ஒப்பாகாது போயிற்றே என்ற 
பகைமையால் தலைவியை அடித்துச் 
சென்று ஒழிக்கக் கருதியபோது, 
தலைவன் அவ்வழி வந்து தலைவியை வெள்ளத்திலிருந்து மீட்டுக்காத்தான். 
தலைவி அவன் நினைவாகவே உள்ளாள்.] 
 
களிறுதரு புணர்ச்சியால் அறத்தொடுநிற்றல்: 
 
மண் அலை யாமல் வளர்க்கின்ற வாணன்தென் மாறைவெற்பில் 
அண்ணலைஆயிழைபாகன்என்றுஅஞ்சினம்அஞ்சனம்தோய் 
கண்அலை நீர்இடப் பாகமும் மேல்வந்த கைக்களிற்றின் 
புண்அலை நீர்வலப் பாகமும் தோயப் பொருதஅன்றே. 
தஞ்சை. 302 
எனவும் வரும். 
 
      
இம் மூன்றனுள் ஒன்றான் அறத்தொடு நிற்க அமையும் 
எனக்கொள்க. 
 
      
[உலகம் வருந்தாதபடிக் காக்கும் வாணனுடைய தென்மாறையிலே, 
தலைவன்,
யானையைக் கண்டு அஞ்சி அஞ்சனம் 
தோய்ந்த கண்கள் நீர் 
பெருக்கக்
கலங்கிய தலைவியை இடக்கையால் அஞ்சாதவாறு 
அணைத்துக்கொண்டு,
வலக்கையால் யானையோடு போரிட்டு அதன் குருதி 
முழுதும் தன் மேல்
படிய நின்றான். அந்நிலையில் 
வலப்புறமாக இருந்த 
தன் 
 |