560இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

உடல் குருதியால் சிவக்கத் தன் இடப்புறமாய் இருந்த தலைவி உடல்
மைகரைந்த கண்ணீரால் கரிய இருந்த காட்சி, வலப்பால் செம்மையும்
இடப்பால் கருமையுமாய் உள்ள அம்மையப்பனை நினைவுறுத்தியது.]
 

அநுவாத முகத்தான், தலைமகள் வேற்றுமைகண்டு
நற்றாய் செவிலியை வினாதலும் வரப்பெறும்.
அதற்குச் செய்யுள்:
 

குணம்குற்றம்என்னும்அக்கூறு அறியாதகுதலைமென்சொல்
அணங்குஉற்ற மையல் அறிந்தனை யோஅரும் பாம்முலைகள்
சுணங்குஉற் றனவளைதோள்உற் றனஇல்லை சொல்தளரும்
நிணம்குற்ற வேற்கண் நிறம்பசப்பு ஊர நிரைவளையே.

அம்பி. 358

எனவும்,

      [தோழி! குணமும் குற்றமும் பகுத்துஅறியும் அளவுக்கு வயது
வரப்பெறாத மழலை பேசும் தலைவிக்கு ஏற்பட்ட மயக்கம் பற்றிய செய்தி
உனக்குத் தெரியுமா? அரும்பு போன்ற நகில்களில் தேமல் படரத்தொடங்கி
விட்டது, தோள்வளைகள் கழலத் தொடங்கிவிட்டன பேச்சும் தடுமாறுகிறது.
வேல்போன்ற கண்கள் பசலை பாய்ந்துவிட்டன. அவளுக்கு இவ்வேறுபாடு
ஏற்பட்டதன் காரணம் யாதோ?]


செவிலி நற்றாய்க்கு முன்னிலைப் புறமொழியான்
அறத்தொடு நிற்றல்:


இளையாள் இவளைஎன் சொல்லிப் பரவுதும் ஈர்எயிறு
முளையா அளவில்முதுக்குறைந்தாள் முடிசாய்ந்துஇமையோர்
வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன்
திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே.

திரு. 294

எனவும் வரும,