நற்றாய் குறிப்பின் அன்றி அறத்தொடுநிற்கப் பெறாள் என்றமையால், அதற்கு
உதாரணம் இன்று.
161
[தலை தாழ்த்தித் தேவர்கள் வணங்கித் துதிக்கும்
சிற்றம்பலத்தானுடைய
அருவிகள் பரவிப்
பாயும் கயிலைமலையிலே
பயிலுகின்ற செல்வியாகிய நம்
தலைவியை, இளைய இவ்வயதில் இவள்
செய்துள்ள
செயல்நோக்கி எவ்வாறு
புகழ்ந்து வாழ்த்துவேன்! இரண்டு
பற்கள் புதியனவாக விழுந்து முளைப்பதன்
முன்னமேயே பேரறிவு
படைத்துவிட்டாளே!]
161
களவு வெளிப்பாட்டின் கிளவித்தொகை
534 போக்கே1 கற்பொடு புணர்ந்த கவ்வை2
மீட்சி3 என்று ஆங்கு விளம்பிய மூன்றும்
வெளிப்படைக் கிளவி வெளிப்படு தொகையே.
இது களவு வெளிப்பாட்டிற்கு உரிய கிளவித்தொகை இத்துணைத்து
என்கின்றது.
(இ-ள்) போக்கு முதலாக மீட்சி ஈறாகச் சொல்லப்பட்ட மூன்றும் களவு
வெளிப்பாட்டிற்கு உரிய
கிளவித்தொகை என்றவாறு.
162
விளக்கம்
1 தமரைப் பிரிந்து தலைவி தலைவனுடன் செல்லுதல்.
2 தலைவி தலைவனுடன் சென்றதைப் பலரும் அறிதல்.
3 தலைவி தலைவனுடன் மீண்டு வருதல்.
இம் மூன்று கிளவித்தொகைக்கும் வகையும் விரியும் இனி வரும்
நூற்பாக்களில் கூறப்பெறும்.
71
|