ஒத்த நூற்பாக்கள்
‘தன்னும் அவளும் அவனும் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தல்என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித்
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பல்
தொல். பொ. 36
‘போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்
மகள்நெஞ்சு வலிப்பினும் .... .... செவிலி மேன.'
தொல். பொ. 115
‘வெளிப்படை தானே கற்பினோடு ஒக்கும்.'
தொல். பொ. 141
‘வெளிப்படை தானே விரிக்குங் காலைத்
தந்தை தாயே தன்னையர் என்று ஆங்கு
அன்னவர் அறியப் பண்பா கும்மே'
இறை. அக. 26
‘அவருள்,
தாய்அறி வுறுதலின் ஏனோரும் அறிப.'
இறை. அக. 27
‘தந்தை தன்னையர் ஆயிறு வீற்றும்
முன்னம் அல்லது கூற்றுஅவண் இல்லை.'
இறை. அக. 28
முழுதும் --
ந. அ. 180
(பாடம்) ‘வெளிப்படைக் கிளவியின் வழிப்படு தொகையே.'
‘மிகைபயில் களவு வெளிப்படற்கு உரிய
தொகைபயில் கிளவித் தொகைஒரு நான்கு அவை
விரைந்துஉடன் போகல் வரைந்துஅவண் கோடல்
கற்பொடு புணர்ந்த கவ்வை மீட்சிஎனப்
பொற்புடை நாவலர் புணர்த்து அமைத் தனரே'
மா. அ. 78
162
|