உடன் போக்கு வகை
535 போக்குஅறி வுறுத்தல்1 போக்குஉடன் படாமை2
போக்குஉடன் படுத்தல்3 போக்குஉடன் படுதல்4
போக்கல்5 விலக்கல்6 புகழ்தல்7 தேற்றல்8 என்று
யாப்புஅமை உடன்போக்கு இருநால் வகைத்தே.
இது நிறுத்த முறையானே களவு வெளிப்படைக்கிளவித் தொகை
மூன்றனுள்
போக்குவகை இத்துணைத்து என்கின்றது.
(இ-ள்) போக்கு அறிவுறுத்தல் முதலாகத் தேற்றல் ஈறாக எட்டுவகையினை
உடைத்தாம், அன்பு அமைந்த
உடன் போக்கு என்றவாறு.
163
விளக்கம்
1, தோழி தலைவியை அழைத்துக்கொண்டு தலைவிதமர் அறியாமல்
சென்றவிடுமாறு தலைவனிடம் கூறுதல்
2, தலைவியின் மென்மையையும் பாலையின் வன்மையையும் உட்கொண்டு
தலைவன் தலைவியை அழைத்துச்செல்ல
உடன்படாமை.
3, தோழி, தலைவனோடு வரின் தலைவிக்குப் பாலையும் சோலையாகும்
என்பதனை அவனிடம் விளக்கிக் கூறி
அவனைத் தலைவியை உடன்
அழைத்துச்செல்லுமாறு வற்புறுத்தல்.
4, தலைவன் தலைவியை உடன்கொண்டு போதலுக்கு ஒருப்படுதல்.
5, தோழி தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கி விடுத்தல்.
6, தலைவியை மீட்கச் செல்லும் செவிலியைத் தோழி விலக்குதல்.
கண்டோர்,
தங்கிச் செல்லுமாறு
தலைவன் தலைவியரின் செலவைத்
தடுத்தல்.
|