‘பருவம் கூறல் படைத்துமொழி தல்லொடு
மருவுஅமர் கோதையை மகட்பேச்சு உரைத்தல்
பொன்அணிவு உரைத்தல் பொருள்விலை கூறல்
அன்னம்மென் நடையாள் அருமைகேட்டு அழிதல்
தளர்வுஅறிந்து உரைத்தல் தாழ்குழல் ஆடல்
உளம்நினைவு உரைத்தல் உடன்கொண்டு சேறற்கு
அருமை உரைத்தல் ஆதரம் கூறல்.
மருவிய தடங்கயல் வாழாள் என்றல்
பொருவரு கற்பின் புனைநலன் உரைத்தல்
துணிந்தமை கூறல் துணிவு கேட்டல்
துணிவுஅறி வித்தல் தொல்லை நாண்விடல்
துணிவுஎடுத்துரைத்தல் கொண்டு அகல்எனஉரைத்தல்
அடிவழி நினைந்துநின்று அவன்உளம் வாடல்
கொடியிடை யாளைக் கொண்டுசென்று உய்த்தல்
ஓம்படுத்து உரைத்தல் வழிப்படுத்து உரைத்தல்
தேம்படு கோதையைத் திறல்அடு வேலோன்
பையக்கொண்டு ஏகல் பயம்கெட உரைத்தல்
மைஅமர் கண்ணியை வழிஅயர்வு அகற்றல்
நெறிவிலக் கல்லொடு நெறியிடைக் கண்டவர்
செறிவுஎடுத்து உரைத்தல் சேயிழை யாளுடன்
வழிவிளை யாடல்வழிஎதிர் வருவோர்
எழில்நகர் அருமை இதுஎன உரைத்தல்
நகர்காட் டல்லொடு நகர்இடைப் புக்குப்
பதிபரிசு உரைத்தல் பாங்கியைக் கிட்டி