அகத்திணையியல்--நூற்பா எண் 164569

‘கையடை மகிழ்ச்சி கண்டோர் கூற்றே
நைவுடைச் செவிலி நற்றாய் மொழியே
செல்சுரத்து இரங்கல் கண்டோர் தெளித்தல்
இல்வயின் பெயர்தல் இளையோர் செலவே
அறிந்தனன் மறைதல் அயலோர் மொழிதல்
பெயர்ந்தனர் வருதல் பெருங்கிளை மகிழ்வே
தாயர் கூற்றே தலைமகன் மொழியோடு
ஆயின பிறவும் உடன்செலவு ஆகும்.' ]

த. நெ. வி. 23


முழுதும்--

ந. அ. 182


‘உரவோற்கு இகுளை உடன்போக்கு உணர்த்தல்
உரவோன் மறுத்தல் அவள்உடன் படுத்தல்
உரவோன் உடன்படல் ஒண்ணுதல் பாங்கி
வாள்நுதற்கு உடன்போக்கு உணர்த்தல் வாள்நுதல்
நாண் அழிபு இரங்கல் நவைதீர் பாங்கி
பொற்புஅமர் கற்பின் மேம்பாடு புகழ்தல்
இல்பயில் இறைவி ஒருப்பட்டு எழுதல்
வெய்ய சுரத்துஇயல் விழுமிதின் கூறல்
கையடை கொடுத்தல் மைஇருள் விடுத்தல்
அருஞ்சுரத்து உய்த்தல் அயர்வுஅறிந்து இருத்தல்
மகிழ்ந்து அலர் சூட்டி மனம்உவந்து உரைத்தல்
கண்டோர் அயிர்த்தல் கடத்திடை விலக்கல்
தண்டலை மன்பதி அணிந்தமை சாற்றல்
வண்டுஇமிர் தாரோன் தன்பதி அடைந்தமை
உணர்ந்திட உரைத்தல் ஒன்பதிற்று இரட்டியும்
புணர்ந்துஉடன் போகற்குப் பொருந்தியவிரியே.'


மா. அ. 80


பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல்:


மைநீர் நெடுங்கண்மடந்தையுடன் தஞ்சைவாணன்வெற்பா
செந்நீர் விழவுஅணி நின்நகர்க் கேசென்ற சேர்ந்தருள்மற்று
72