570இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

இந்நீர்மை யன்றிஒர் ஆறும்இன் றால்இங்குஎம் ஐயர்என்றால்
முந்நீர் உலகும்கொள் ளார்விலை யாக முலையினுக்கே.

தஞ்சை. 305

எனவும்,

      [வெற்பா! எம் ஐயர் தலைவியை மணந்துகோடற்குப்
பரிசப்பொருளாக இவ்வுலகத்தையே கொடுப்பதானாலும் கொள்ளுபவராகத்
தோன்றவில்லை. மையின் கருமைகொண்ட நெடுங்கண்ணள் ஆகிய
தலைவியுடன் சிறந்த நீர்விழா நடக்கும் உன் ஊருக்குப் புறப்பட்டுச்
சென்றுவிடு. இதனைத் தவிர இவளை அடைவதற்கு வேறு வழி எதுவும்
இல்லை.]


தலைவன் உடன்போக்கு மறுத்தல்:


மெல்லியல் கொங்கை பெரியமின் நேர்இடை மெல்லடிபூக்
கல்இயல் வெம்மைக் கடம்கடுந் தீக்கற்று வானம்எல்லாம்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்கள்அம் கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லிஅங் கோதைநல் லாய்எல்லை சேய்த்துஎம் அகல்நகரே.

திரு. 201

எனவும்,

      [தேவர் புகழும் சிறப்புடைய சந்திரனைச் சூடிய சிவபெருமான்

புலியூரில் உள்ள தோழியே! எம் பேரூர் சேய்மையில் உள்ளது. தலைவியின்
கொங்கைகள் பெரிய. மின்னலைப் போன்ற இடை சிறிது. இவள் மெல்லிய
பூப்போன்ற அடிகள் கல் பரவிய கொடிய பாலையாகிய கடுந்தீயில்
யாங்கனம் செல்லவல்லன?]
 


பாங்கி தலைவனை உடன்படுத்தல்:
 

பிணையும் கலையும்வன் பேய்த்தேரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐய மெய்யே
இணையும்அளவும்இல்லா இறையோன் உறைதில்லைத்தண்பூம்
பணையும்தடமும்அன்றே நின்னொடுஏகின்எம்பைந்தொடிக்கே.

திரு.202

எனவும்,