[ஐய! உன்னோடு செல்லும்போது, தலைவிக்கு மான்கள் நீர்
வேட்கையுற்றுக்
கானல்நீரைக்
குடிக்கும்தண்ணீர் என்று கருதிச் செல்லும்
காடுகள் நிறைந்த
வழியும், தனக்கு ஒப்பும் எல்லையும்
இல்லாத
சிவபெருமான் தங்கும்
தில்லையிலுள்ள பூக்கள் நிறைந்த குளமும்
வயலும்போலும்!]
தலைவன் போக்கு உடன்படுதல்:
இன்னாத கானும் இனிதுஎன்று நீர்இங்கு இயைந்த அன்பும்
அந்நாள் அளித்த அணங்கும்உண் டேஎனது ஆவிஅன்னார்
மின்னார் திருந்துஇழை மெய்வருந் தாவகை மெல்லமெல்லப்
பன்னாள் படவும் உடன்கொண்டு சேறும் பணிமொழியே.
அம்பி. 365
எனவும்,
[பணிமொழித் தோழியே! இன்னாதபாலையும் என்னுடன்வரின்
தலைவிக்கு
இனிதாக இருக்கும் என்று நீ
கூறிய அன்பு மொழிகளும், பண்டு
தலைவியை
எனக்குத் தந்ததெய்வத்தின் திருவருளும் தவறாது உண்டு
ஆதலின்,என்உயிர்போன்ற தலைவியின் உடல் வருந்தாதவகையில் மெல்லப்
பலநாள்கள் நடத்தியாவது
உடன்கொண்டு சென்றுவிடுகிறேன்.]
பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்:
குறப்பாவை நின்குழல்வேங்கைஅம் போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
மறப்பான் அடுப்பதுஓர் தீவினை வந்துஉறில் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன் னத்தகும் பெற்றியரே.
திரு. 205
எனவும்,
[குறவர் குலப்பாவையே! சிவபெருமானுடைய புலியூரை மறக்கும்
படியானது
ஒரு தீவினை ஏற்படுமாயின் பல
பிறப்புக்கள் எடுக்க நேரிடினும்,
மீண்டும்
நினக்கே கணவ
|