572இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

னாக வந்து உன்னோடு கூடுதற்கு உரிய தலைவன் உன் கூந்தலில்
கோங்கம் பூவினை வேங்கைப் பூவுடன் கலந்து பாதிரிப் பூவையும்
இணைத்துச் சூட்டுதலை விரும்புகிறான்.

   பாலைநிலத்துக் கோங்கம் பூவைக் கூறி உடன் போக்கினைக் குறிப்பால்

உணர்த்தியவாறு.]


தலைவி நாண் அழிபு இரங்கல்:


மறவாகை வேல்அங்கை வாணனை மாறையர் மன்னனைத்தம்
உறவாக எண்ணி உறாதவர் போல்உயிர் ஓம்பிஎன்றும்
துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல்உலகில்
பிறவாது ஒழிகைநன் றேஒரு காலமும் பெண்பிறப்பே.

தஞ்சை. 310


எனவும
,

     [வேல் ஏந்திய வாணனாகிய மாறையர்மன்னனை உறவாகக் கருதி
நட்புக்கொள்ளாத பகைவர் போல, பாதுகாத்து இன்றுவரை யான் துறவாத
நாணத்தைத் துறக்கும் நிலை இன்று எனக்கு ஏற்பட்டதனை நோக்கின்,
இவ்வுலகில் பெண்ணாகப் பிறவாதிருத்தலே சிறந்தது என்று தோன்றுகிறது.]
 

கற்பு மேம்பாடு பூண்முலைப்பாங்கி புகறல்:


தாயில்சிறந்ததன்று நாண்தையலாருக்கு அந்நாண்தகைசால்
வேயில் சிறந்தமென் தோளிதிண் கற்பின் விழுமிதன்றுஈங்
கோயில் சிறந்துசிற் றம்பலத்து ஆடும்எம் கூத்தப்பிரான்
வாயில் சிறந்த மதியில் சிறந்த மதிநுதலே.


திரு. 204

எனவும,

     [மதிநுதலே! ஈங்கோய்மலையில் சிறந்து காட்சி வழங்கிச்
சிற்றம்பலத்தில் கூத்தாடும் சிவபெருமானுடைய வாயில் சிறந்த
நூல்களிடத்துச் சிறப்புடைய பொருளாகச் சொல்லப்படுவனவற்றுள், நாணம்
மகளிருக்குத் தாயினும் சிறந்தது; அந்நாணம்தானும் கற்பினும் மேம்பட்டது
அன்று.]