தலைவி ஒருப்பட்டு எழுதல்:
மல்பாய் விடையோன் மகிழ்புலி யூர்என் னொடும்வளர்ந்த
பொற்பு ஆர் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக்
கற்புஆர் கடுங்கால் கலக்கிப் பறித்துஎறி யக்கழிக
இற்பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே.
திரு. 208
எனவும்,
[பாயும் விடை அரன் புலியூரிலே என்னோடு இதுகாறும் வளர்ந்த
அழகுதரும் நாணம் தலைவனிடத்து
யான்கொண்ட காமம் இடையே புகுந்து
தள்ளக் கற்பாகிய கடுங்காற்று கலக்கி வேரோடும் பறித்து
அப்புறப்படுத்துகையினாலே
என்னைவிட்டு நீங்குவதாகுக. இந்நிலை
ஏற்படுவதற்குக் காரணமான நற்குடியில் மகளிர் எழுமையும் பிறவாராக.]
அங்ஙனம் ஒருப்பட்டெழுந்தமை பாங்கி
தலைவற்கு உணர்த்தல்:
மின்ஏய்மருங்குல்நெருங்குபைங்கோதைவிளங்குஇழைநின்
பின்னே வருதல் கருதிய போதும்என் பிள்ளைக்கிள்ளை
அன்னே மகஅன்பும் அத்தனை யோஎன்றது அத்தனையின்
கொன்னே அருமந்த கொங்கைகண் ணீரில் குளித்தனவே.
அம்பி. 369
எனவும்,
[மின்னலை ஒத்த இடையையும், கோதையையும் பல அணிகளையும்
உடைய
தலைவி உன் பின்னே வரக் கருதிய
போதும் என் கிளிப்பிள்ளை
‘அன்னையே! பிள்ளையிடத்துக் காட்டும் அன்பும் அவ்வளவுதானா? என்று
கேட்டது. அதனைக் கேட்ட அளவில் வீணாகத் தலைவியின் நகில்கள்
அவள் கண்ணீரால் நீராட்டப்பட்டன.]
பாங்கி சுரத்துஇயல்பு உரைத்துழித் தலைமகள் சொல்லல்:
செல்லின்கொடியகளிற்றண்ணல்வாணன்தென்மாறை அன்ன
வில்லின் கொடிய புருவமின் னேஎன் விளம்புதிநீ
|