574இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

சொல்லின்கொடியநம் அன்னையைப்போல்பவர்சூழ்ந்திருக்கும்
இல்லின்கொடியகொல்லோசெல்லும்நாட்டு அவ்விருஞ்சுரமே.

தஞ்சை. 313

எனவும,

       [இடியினும் கொடிய யானைப்படையை உடைய அண்ணலாகிய

 வாணனுடைய தென்மாறையில் இருக்கும், வில்லினும் வளைந்த புருவத்தை
உடைய மி்ன்னல் போன்று ஒளி வீசும் தோழியே! நீ என்ன கூறுகிறாய்?
கொடுஞ்சொல் பேசும் நம் அன்னையைப் போன்றவர் சூழ்ந்து இருக்கும்
நம் வீட்டைவிட உடன்போக்குப் போகும் நாட்டிற்கு இடைவழியில் உள்ள
பாலைநிலங்கள் கொடியனவா?]


பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தல்;
 

பறந்திருந்து உம்பர் பதைப்பப் படரும் புரம்கரப்பச்
சிறந்துஎரி யாடிதென் தில்லைஅன் னாள் திறத் துச்சிலம்பா
அறம்திருந்து உன்அரு ளும்பிறிது ஆயின் அருமறையின்
திறம்திரிந்து ஆர்கலியும்முற்றும்வற்றும் இச்சேண்நிலத்தே.

திரு. 213


எனவும
,

       [வெற்ப! தேவருக்குத் தீங்கு தந்த முப்புரங்களையும் அழித்துச்
சிறந்து எரியில் ஆடும் சிவபெருமானுடைய தில்லையை ஒப்பவளாகிய
தலைவி திறத்தில் அறவழியிலேயே செல்லும் உன் அருள் வேறுபடுமாயின்,
இவ்வுலகில் வேதவழக்கு மாறுபடுதலோடு கடலும் முழுதும் வற்றிவிடும். உன்
போன்றார் சிலராதல் அறவழி திறம்பாது வாழவதனால் தான், மறைவழியும்
உலகநலனும் சிறந்துள்ளன.


பாங்கி வைகுஇருள் விடுத்தல்:


ஊரும் கலிகெழு சேரியும் தாயரும் உள்புலம்பித்
தேரும் பழிபுகழ் ஆக்கிவந்து எய்துவை சேய்அனையாய்