வாரும் பருமணி வம்பும் பொறாமுலை வல்லியுடன்
யாரும் துயில்கொள்ளும் நள்இருள் யாமத்து எழுந்தருளே.
அம்பி. 371
எனவும்,
[முருகனை ஒப்பாய்! கச்சினைப் பொரும் தனபாரத்தை உடைய
தலைவியுடன்
எல்லாரும் உறங்கும் இந்நடுஇரவில்
புறப்பட்டுச் சென்று,
ஊரவரும்
சேரியிலுள்ளாரும் தாயரும் மனம் பிரிவால் வாடிப் பேசும்
பழிச்சொற்களைப்
புகழ்ச்சொல்லாக மாற்றி விரைவில் தலைவியுடன் மீண்டு
வந்துசேருவாயாக]
தலைவியைத் தலைவன் சுரத்து உய்த்தல்:
பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேண்அரவம்
பூணத் திருத்திய பொங்குஒளி யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்கும்
காணத் திருத்திய போலும்முன் நாம்மன்னும் கானங்களே.
திரு. 215
எனவும்,
[பாம்புகளை விரும்பி அணிகளாக அணியும் ஒளியோ னுடைய
புலியூரை
ஒத்த அழகிய நம் ஊர் சேரும்
இருபக்கமும் நன்கு படைத்து
அமைக்கப்பட்டாற்போலும் காடுகள் வழி நெடுக உள்ளன. யான் விரும்பும்
வண்ணம், கைபுனையப்பட்ட சிறிய அடிகளை உடையாய்! மெல்லச்
செல்வாயாக.]
தலைமகன் தலைமகள் அசைவு அறிந்து இருத்தல்:
வரமாவை வேல்படை வாணன்தென் மாறை வணங்கலர்கள்
புரமான வல்அழல் பொங்குவெங் கானில் பொருந்தியகூர்
அரமாய கல்உன் அடிமலர் ஆற்றல ஆதலினால்
சுரம்ஆறும் எல்லை, நல் லாய்இருப் பாய்இந்தச் சோலையிலே
தஞ்சை. 317
எனவும்,
|