576இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

      [நல்லாய்! வேற்படைவாணனை வணங்காத பகைவர் சென்று சேரும்
இடமான அழல்பொங்கும் கொடிய பாலையில் அரம் போன்ற கூரிய
கற்களை உன் அடிகளாகிய மலர்கள் தாங்கும் ஆற்றல் உடைய அல்ல

ஆதலின், பாலையின் வெப்பம் நீங்குங்காறும் இச்சோலையில் தங்கி
இளைப்பாறுவாயாக.]


தலைமகன் தலைமகளை உவந்து அலர்சூட்டி
உள்மகிழ்ந்து உரைத்தல்:



அடிமலர்போற்றவும்போற்றிசெய்யாஇவள் ஆய்முடிக்குயான்
கடிமலர் சூட்டவும் காட்டிய தால்கள்வர் காய்ந்துஎறியும்
துடிமலர் சீர்க்குஎதிர் கூகை இரட்டும் சுரத்திடைஓர்
வடிமலர் வேல்படை யான்வாணன் மாறைஎன் மாதவமே.

தஞ்சை. 318

எனவும்,

      [வேற்படை வாணன் மாறையில் யான்செய்த தவம்,
ஆறலைகள்வர்கள் செருக்கோடு ஒலிக்கும் துடிப்பறையின் ஒலிக்கு எதிராகக்
கோட்டான் குழறும் பாலை நிலத்தில், தலைவியின் அடிகளாகிய மலர்களை
யான் போற்றுமாறும், அவளைப் புனைந்துகூறி அவள் கூந்தலுக்கு
நறுமணமலர்களைச் சூட்டுமாறும் வாய்ப்பு அளித்தது.]


கண்டோர் அயிர்த்தல்:


கருஆர் புயல்என்றும் கண்டுஅறி யாதஇக் கான்அகத்தே
வருவார் சிலர்அவர் மற்றுஇவர் யாவர்கொல் வாரிதந்த
திருவாம் எனில்இவள் செங்கையில் பங்கயம் இல்லைசெல்வன்
மருஆர் துளவுஅணி மால்எனின் மார்பின் மறுஇல்லையே.

அம்பி. 377


எனவும் வரும்.

     [கார்மேகத்தைக் கண்டறியாத இப்பாலையிலே பொதுவாக நன்மக்கள்
வாரார்; இவர் யாரோ? தெற்றென உணர்தல் இயலவில்லை. இவளைத்
திருமகள் என்று கொள்வோ