அகத்திணையியல்--நூற்பா எண் 164577

 மாயின், இவள் செங்கையில் தாமரை இல்லை. இவனைத் திருமால் என்று
கொள்வோமாயின், இவன் மார்பில் மச்சம் இல்லையே!]

       ஒன்றென முடித்தலால், கண்டோர் மகிழ்தலும் இரங்கலும் வரப்பெறுதல் கொள்க.
 

கண்டோர் மகிழ்தல்:
 

முன்செல்ல நாணும் முகிழ்நகை வல்லி முருகன்இவன்
பின்செல்ல எண்ணும் பிடிநடை காணஇப் பேருலகில்
புன்செல்வர் தேடும் பொருள்போல் இறுகப் பொதிந்தஅன்பை
என்சொல்லல் இங்ஙன் தொலைந்ததிவ்வாறுஇவ் விருவர்க்குமே.

அம்பி.378


எனவும்
,

        [தலைவனுக்கு முன்னே நடந்து செல்வதற்கு இப்புன்னகைப்
பூங்கொடியாள் வெட்கப்படுகிறாள். இவள் பெண்யானை போன்ற
நடையழகைக் காண இச்செல்வன் இவள்பின்னே செல்ல நினைக்கிறான்.
அற்பர் தாம் தேடும் பொருளை இறுகப் பொதிந்து வைப்பதுபோல, இவர்
தம் அன்பும் இறுகப் பொதிந்த அன்பு. இவ்வாறு மகிழ்வோடு இவர்கள்
பாலைநில நெடுந்தொலைவினைக் கடந்து வந்துள்ளனர்.]


கண்டோர் இரங்கல்:


பேதைப் பருவம் கழிந்திலள் இன்னமும் பேணியதன்
காதல் கொழுநன் விழுமிய கேண்மையைக் காதலித்துப்
போதற்கு அரிய புகைஅழல் கானகம் போந்தஇந்த
மாதைப் பயந்த மடந்தைஎவ் வாறுஉயிர் வாழ்ந்தனளே.

அம்பி.380


எனவும் வரும்.
73