களும் துறைகள்தோறும் முத்தநகை
மகளிர் சென்று நீராடும் குளங்களும்
புடை சூழ்ந்த நெடுந்தொலைவு புகழ் பரவியுள்ள அப்பேரூர்
காட்சியளிக்கும்.]
தலைவிக்குத் தலைவன் தன் பதி அணுமை சாற்றல்:
முன்னோன் அருள்முன்னும்
முன்னா வினையின்முனகர்துன்னும்
இன்னாக்கடறிது இப்போழ்தேகடந்துஇன்றுகாண்டும்சென்று
பொன்ஆர் அணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா என உடை யான்நட மாடுசிற் றம்பலமே.
திரு.217
எனவும்,
[இறைவன் அருளை முற்பிறப்பும் வேண்டிப் பெறாத தீவினையோர்
தங்கும்
கொடிய இப்பாலையை இப்பொழுது கடந்து சென்றால், இன்றே
அழகிய
மாளிகைகளை உடைய தென்புலியூரில் தென்னா என்று அடியவர்
புகழும்
சிவபெருமான் நடமாடும் சிற்றம்பலத்தைக் காணலாம்.]
தலைவிக்குத் தன் நகர் காட்டல்:
மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்
மன்போல் பிறைஅணி மாளிகை சூலத்த வாய்மடவாய்
நின்போல்நடை அன்னம்துன்னிமுன்தோன்றும்நன் நீள்நகரே
திரு. 222
எனவும்,
[மின்னல் போல ஒளி வீசும் கொடிகள் வான் அளாவி வானம்
ஆகிய
கடலின் திரைகளைப் போலக் காட்சி வழங்கவும், பொன் நிறமான
மதில்கள்
மேருமலை போலத் தோற்றம் அளிக்கவும், பொலியும் புலியூரில்
உள்ள
சிவபெருமானைப் போலச் சந்திரமண்டலம்வரை அளாவி உச்சியில்
சந்திரனைச் சூடும் மாளிகைகள் உன் நடைபோன்ற நடையை உடைய
அன்னங்கள் விளையாடும் சூழலை உடையனவாக, நம் நகர் காட்சி
வழங்கும்.] |