580இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக்கு உணர்த்தல்:
 

செய்குன்று உவைஇவை சீர்மலர் வாவி விசும்புஇயங்கி
நைகின்றதிங்கள் எய்ப்பு ஆறும்பொழில்அவைஞாங்கர்எங்கும்
பொய்குன்ற வேதியர் ஓதுஇடம் உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை அம்பல வற்குஇடம் ஏந்திழையே,

திரு. 223

எனவும்,

      [ஏந்திழை! உங்கே செய்குன்றுகள் உள்ளன. இவை அழகிய
மலர்களை உடைய ஓடைகள்; வானத்தில் திரிதலால் வந்த இளைப்பைச்
சந்திரன் போக்கிக்கொள்ளும் சோலைகள் அவை; பக்கம் எல்லாம் பொய்
நீங்க வேதியர் வேதம் ஓதும் இடங்கள் அங்குள்ளன; இவ்விடம்
மேருவாகியவில்லை ஏந்திய அம்பலவன் நடமாடும் இடமாகும்,]
 

தலைவன் தலைவியொடு தன் நகர் சார்தல்:
 

சங்கம் முழங்க மணிமுரசு ஆர்ப்பத் தமர்எதிர்கொள்
அங்கண் நலம்திகழ் ஆவணம் போல்அகன் மாளிகையில்
பொங்குஇலை வேலனும் பூவையும் மேயினர் புண்டரிகச்
செங்கை வலந்திகி ரித்திரு மாலும் திருவும்ஒத்தே.

அம்பி. 384

எனவும் வரும்.

       [சங்குகள் முழங்கவும், முரசங்கள் ஆர்ப்பவும், தலைவன் உறவினர்
எதிர்கொள்ளவும், கடைத்தெருவைப் போலப் பொலிவு பெறும் அகன்ற
மாளிகையில் தலைவனும் தலைவியும் செந்தாமரைக்கையில் சக்கரம் ஏந்திய
திருமாலும் திருமகளும் போல வந்து சேர்ந்தனர்]

       இவற்றுள் பாங்கி தலைமகற்கு உடன்போக்கு உணர்த்தலும்
தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தலும் ஆகிய இரண்டும் போக்கு
அறிவுறுத்தற்கும்,