தலைமகன் மறுத்தலும் தலைவி
நாண் அழிபு இரங்கலும் ஆகிய இரண்டும்
போக்கு உடன்படாமைக்கும்,
பாங்கி தலைவனை உடன்படுத்தலும் தலைவிக்குக் கற்பு மேம்பாடு கூறலும்
ஆகிய இரண்டும் போக்கு உடன்படுத்தற்கும்,
தலைவன் போக்கு உடன்படுதலும் தலைவி ஒருப்பட்டு எழுதலும்
பாங்கி
சுரத்து இயல் உரைத்துழிச் சொல்லலும் ஆகிய மூன்றும் போக்கு
உடன்படுதற்கும்,
பாங்கி கையடை கொடுத்தலும் வைகு இருள் விடுத்தலும் தலைமகன்
தலைமகளைச் சுரத்து உய்த்தலும் ஆகிய மூன்றும் போக்கற்கும்,
தலைவன் தலைவியை அசைவு அறிந்து இருத்தலும் கண்டோர்
காதலின்
விலக்கலும் ஆகிய இரண்டும் விலக்கற்கும்,
தலைவன் தலைவியை உவந்து அலர்சூட்டி உள்மகிழ்ந்து உரைத்தலும்
கண்டோர் அயிர்த்தலும் ஆகிய இரண்டும் புகழ்தற்கும்,
கண்டோர் தம் பதி அணுமை சாற்றலும் தலைவன் தன்பதி
அடைந்தமை
தலைவிக்கு உணர்த்தலும் ஆகிய இரண்டும் தேற்றற்கும்
உரியவாம்.
164
கற்பொடு புணர்ந்த கவ்வையின் வகை
537 செவிலி புலம்பல்1 நற்றாய் புலம்பல்2
கவர்மனை மருட்சி3 கண்டோர் இரக்கம்4
செவிலிபின் தேடிச் சேறல்5 என்றாங்குக்
கற்பொடு புணர்ந்த கவ்வைஐ வகைத்தே.
கற்பொடு புணர்ந்த கவ்வை கூறுவனவற்றுள், இஃது அதன்வகை
இத்துணைத்து என்கின்றது.
|