(இ-ள்) செவிலி புலம்பல் முதலாகச்
செவிலிபின்தேடிச்சேறல் ஈறாக
ஐந்து
வகையினை உடைத்தாம், கற்பொடு புணர்ந்த கவ்வை என்றவாறு.
மனை எனினும் நற்றாய் எனினும்
ஒக்கும்.
165
விளக்கம்
கற்பொடு புணர்ந்த கவ்வை
-- தலைவி தலைவனுடன் சென்ற செயலைப்
பலரும் அறிந்து கூறும் சொற்கள்.
1,செவிலி தனிப்படர் உழத்தல்.
2,நற்றாய் தனிப்படர் உழத்தல்.
3,நற்றாய் மனம் மயங்குதல்.
4,கண்டவர் மனம் இரங்குதல்,
5,செவிலி உடன்போனவர்பின் தலைவியைத் தேடிச்சேறல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் --
ந. அ. 183
‘கற்பொடு புணர்ந்த கவ்வையின் வகைதாம்
பொற்புறு செவிலி புலம்புதல் உடனே
நற்றாய் புலம்பல் நன்மனை மருட்சி
கண்டோர் இரக்கம் கடத்திடைச் செவிலியின்
தேடிச் சேறலொடு தெரிந்ததுஓர் ஐந்தே.'
மா. அ. 83
முத்துவீரியமும், திருக்கோவையார் உரையும் உடன் போக்கின்கண்
இதனையும் அடக்கிக்கூறும்.
165
கற்பொடு புணர்ந்த கவ்வையின்
விரி
538 வினவிய பாங்கியின் உணர்ந்த காலை
இனையல் என்போர்க்கு எதிர்அழிந்து மொழிதலும்1
தன்அறி வின்மை தன்னைநொந்து உரைத்தலும்2 |