17, செவிலி பாலைநிலப்பெண்
ஒருத்தியிடம் தலைவியைப் பற்றிக் கூறி
வருந்துதல்.
18, குராமரத்தொடு செவிலி புலம்புதல்.
19, தலைவன் தலைவி என்ற இருவரின் கால் சுவடு நிலத்தில்
படிந்துஇருத்தலைக் கண்டு செவிலி வருந்துதல்.
20, காதலன் காதலியராக வருபவரைக் கண்டு, ‘உங்களைப்போலவே
இந்த
வழியில் சென்ற என் மகளையும் அவள் காதலனையும்
கண்டீரோ? என்று
செவிலி வினாவுதல்.
21, செவிலியின் தனிமைத்துன்பத்தை அவர்கள் நீக்குதல்.
22, செவிலி தலைவியைத் தேடியும் காணாமையான் கவலை மிகுதல்.
ஒத்த நூற்பாக்கள்
‘ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்
தாமே செல்லும் தாயரும் உளரே.'
தொல். பொ. 37
‘அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே.'
தொல். பொ. 38
‘தலைவரும் விழும நிலைஎடுத்து உரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீக்கலின் வந்த தம்உறு விழுமமும்
வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழ்ந் தோளை
அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு
என்றுஇவை எல்லாம் இயல்புஉற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன.'
தொல். பொ. 39
‘தன்னும் அவனும் அவளும்
சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் |