அகத்திணையியல்--நூற்பா எண் 166589

      கண்டுகேட் டலும்அவர் கருத்துஉறத் தெளித்தலும்
     காண்தகு புதல்வியைக் காணாது இடைதலும்
     மீண்டவள் செல்வனும் செல்வியும் வியன்நகர்
     ஆண்டுஅமைந் தனர்என ஆராய்ந்து உரைத்தலும்
     கவின்உற இருவரும் கடவுள் பராவலொடு
     புவிபுகழ் புலவர் புணர்த்தமுந் நான்கும்
     செவிலிபின் தேடிச் சென்றுமீள் விரியே.'

மா. அ. 88

     ‘பொற்புடைத் தாகப் புகன்றமூ வொன்பதும்
     கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே.'

மா. அ. 89]


செவிலி பாங்கியை வினாதல் :


மயில்எனப்பேர்ந்து இளவல்லியின் ஒல்கிமென்மான்விழித்துக்
குயில்எனப் பேசும்எம் குட்டன்எங்கு உற்றதுஎன் நெஞ்சகத்தே
பயில்எனப் பேர்ந்துஅறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய்
அயில்எனப் பேரும்கண் ணாய்என் கொலாம்இன்று அயர்கின்றதே.


திரு. 224

எனவும்,

     [என் உள்ளத்தில் வந்து தங்கிப் பின் நீங்கி அறியாத

சிவபெருமானுடைய தில்லையை ஒத்த பூங்குழலாய்! அயில் விழியாய்!
மயில்போல மென்மையோடு ஒதுங்கிப் பூங்கொடி போலத் தளர்ந்து
மான்போல விழி்த்துக் குயில்போலப் பேசும் என் மகள் எங்கு
இருக்கின்றாள்? இன்று நீ மனம் மயங்கி இருப்பதன் காரணம் என்ன? ]
 

பாங்கி செவிலிக்கு உணர்த்தல்:
 

ஆள்அரிக் கும்அரி தாய்த்தில்லை யாவருக் கும்எளிதாம்
தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேல்
கோள்அரிக் கும்நிகர் அன்னார் ஒருவர் குரூஉமலர்த்தார்
வாள்அரிக்கண்ணிகொண்டாள் வண்டல் ஆயத்துஎம் வாள்நுதலே.

திரு. 225

எனவும,