[உலகை ஆளுகின்ற திருமால்
காண்பதற்கு அரியவாய்த்
தில்லையிலே
யாவரும் தரிசிக்கத்தக்கவாறு எளியவாக உள்ள திருவடிகளை
உடைய
சிவபெருமானுடைய இம்மலையிலே, ஒளிபொருந்திய கண்களையும்
நெற்றியையும் உடைய தலைவி, நெருப்பைக் கக்கும் வேலை ஏந்திச்
சிங்கம்போல வந்த தலைவன் வைத்திருந்த நிறமுடைய மலர் மாலையைத்
தன் பாவைக்கு அணிவதற்காக விரும்பிக் கேட்டு அவன் கொடுப்பக்
கொண்டாள். ]
பாங்கியின் உணர்ந்த செவிலி
தேற்றுவார்க்கு
எதிர்அழிந்து மொழிதல்:
வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத்
தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடல் இல்தொல் லோன்தில்லைப் பன்மலர் கேழ்கிளா
மடுத்தான் குடைந்து அன்று அழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற்று
எடுத்தாற்கு இனியன வேஇனி ஆவன எம்அனைக்கே.
திரு. 226
எனவும்,
[மாவடுவின் வகிர்போன்று அமைந்த கண்களை உடைய
தலைவிக்கு
இப்பருவத்தில் இத்தகைய முதுக்குறைவு வியக்கத்தக்கது.
தக்கனது
வேள்வியைக் கெடுத்த அழிவில்லாத தொல்லோனுடைய
தில்லையில்
பலமலர்களும் நிறம்விடும் மடுவிலே தலைவி குளித்தஅன்று
மூழ்கிப்போம்
நிலையளாக, அதுகண்டு வருந்தி அவளைத் தூக்கிக்
கரைசேர்த்த
தலைவனுக்கு இனியன செய்தலே இனி அவளுக்கு ஏற்ற
செயலாகும்.]
செவிலி தன் அறிவின்மைதன்னை
நொந்து உரைத்தல்:
முறுவல்அக் கால்தந்து வந்துஎன்
முலைமுழு வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தஎல் லாம்முழு தும்சிதையத் |