அகத்திணையியல்--நூற்பா எண் 166591

தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலம்சிந்தியார்
உறுவலக் கானகம் தான்படர் வான்ஆம் ஒளியிழையே.


திரு. 227

எனவும் வரும்.
 

முழுவி--முத்தம்கொண்டு; வலக்காரம் -- விரகு.


        [காலன் ஆற்றல் ஓய அழித்தவன் சிற்றம்பலத்தை நினையாதவர்
சென்று சேரத்தக்க கானகத்திற்கு உடன்போக்குப் போதற்கு
நினைத்துப்போலும், ஒளி பொருந்திய அணிகலன்களை உடைய தலைவி
அப்பொழுது சிரித்துக்கொண்டு எனக்கு முத்தம்கொடுத்து என்னைத் தழுவி
இத்தகைய சிறிய விரகுகளை எல்லாம் செய்தாள்போலும்! என்
அறியாமையால் அவளது உள்ளக்குறிப்பை அறியாது போயினேனே!]
 

செவிலி தெய்வம் வாழ்த்தல்:
 

வேமாறு செய்யஎன் மெல்லிய லாளை விதித்தனை நீ
ஆமாறு செய்தனை ஆரணங் கேநின் அருள்ஒழிந்தால்
யாம் ஆறும்வண்ணம் இதற்கு ஒன்றும்இல்லைஓர் ஏதிலன்பின்
போமாறு செய்வித்த நீவரு மாறும் புரிந்துஅருளே.


அம்பி. 389


எனவும்
,

       [வெப்பத்தால் வேகச் செய்யும் வழியிலே என் பெண் செல்லுமாறு
விதித்த தெய்வமே! நீ நல்ல காரியம் செய்தாய்! நீ எங்கட்கு
அருள்செய்தலை நீக்கினால் நாங்கள் வருத்தம் தீர்த்துக் கொள்ளுதற்குரிய
வாய்ப்பு வேறு ஒன்றும் இல்லை. அயலான்பின் போமாறு என்மகளை
விதித்த நீ அவள் மீண்டு வருமாறும் செய்து எங்களைக் காப்பாயாக. ]


செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல் :


தொடுப்பார்தொடுத்து அலர் தூற்றும்பழிவந்துசூழ்விதியைத்
தடுப்பார் எவர்இனிச் சாற்றுவது என்கொல் தடத்தின்முன்வீழ்ந்து