592இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

எடுத்தான் ஒருவன் இருப்பநின் றார்தம் இருநிதிக்குக்
கொடுப்பான் இசைந்தனம் என்று சென்றாள்நம் குலக்கொடியே.


அம்பி. 390

எனவும்,

      [ஊரில் அலர் தூற்றுவார் தூற்றும் பழிச்சொல் நம் குடும்பத்துக்கு வருதல் வேண்டும் என்று விதித்த விதியை மாற்றுவார் ஒருவரும் உலகில் இல்லை. இனிமேல் பேசுவதற்கு யாது உள்ளது? குளத்தில் நம் பெண் விழுந்த அன்று அவளை எடுத்துக் காத்தவன் இருப்ப, அவனை விடுத்து மகட்பேச வந்தார்தம் பரிசப் பொருளைப் பெற்று, மகளை ஏதிலனுக்குக் கொடுக்க நாம் இசைந்தது கண்டு, நம் குலக்கொடியாகிய தலைவி, தன் தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிட்டாள்.]


நற்றாய் தன்னுள்ளே இரங்கல் :


பூவைஉண் டோபுனக் கிள்ளைஉண் டோவெண் புதியமணல்
பாவைஉண்டோபெற்ற பாவிஉண் டோகுன்று பார்த்துஅழைக்கும்
தேவைஉண் டோகற்ற சிற்றில்உண் டோமற்றுஎன் சுற்றம்உண்டோ
பாவைஉண் டோமக ளேசெல்ல நீஇவ் வருஞ்சுரமே.
 

அம்பி. 391


எனவும்
,

       [மகளே! நீ இக்கொடிய பாலைவழியே துணிந்து சென்று விட்டாயே!

இங்கு உனக்கு எத்தனையோ வசதிகள் இருந்தன. நீ போகும் இடத்தில்
நானும் உன் தோழியர் குழாமும் இல்லை. சிலம்பு எதிர் கூவி விளையாட
வாய்ப்பு இல்லை. விளையாடுதற்குப் பூவை, கிளி, வெள்ளிய மணல், பாவை
முதலிய இல்லை. சிற்றில் இழைத்து விளையாடவும் வகை இல்லை.

அங்ஙனம் ஆகவும் துணிந்து பாலைவழியே சென்று விட்டாயே.]


நற்றாய் பாங்கி தன்னொடு புலம்பல்:


முன்னே இதனை மொழிந்தனை யேல்நுந்தை முந்தைமணம்
பின்னே குழலி பெறாள்அல்ல ளேபிற ழாதுஎவர்க்கும்