தன்நேயம் வைத்து அருளும்
தஞ்சை வாணன் தமிழ்ச்சிலம்பில்
பொன்னே அனையநல் லாய்அவ மேசுரம் போக்கினையே.
தஞ்சை. 329
எனவும்,
[எல்லோரிடமும் தவறாது அன்புசெலுத்தும் வாணன் மலையில்
உள்ள
திருமகள்போன்ற பெண்ணே! தலைவி தலைவன் இவர்களது
தொடர்பை
முன்னமேயே தந்தை முன்னர் நீ கூறியிருப்பின் தலைவி
தலைவனைத்
திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பைப்
பெற்றிருக்கமாட்டாளா? அதனைச்
செய்யாது அவளை வீணாகப்
பாலைநிலவழியில் செல்லுமாறு
விட்டுவிட்டாயே.]
தோழி அழுங்க நற்றாய்
புலம்பல்:
தாய்என்செய் தாள்என்று தள்ளிஎன்
பாவைதன் பால்மயங்க
மாயம்செய் தான்ஒரு வள்ளல்பின் னேஅழல் வெஞ்சுரத்துப்
போய்என்செய் தாள்என்று அறிகிலேன் ஒன்றும் பொறியிலியேன்
நீஎன்செய் வாய்மக ளேகண்கள் நீ்ர்மல்க நின்றுநின்றே.
அம்பி.392
எனவும்,
[‘மகளே! ‘தாய் உனக்கு என்ன உதவி செய்து விட்டாள்?' என்று கூறி
என்னைப் புறக்கணிக்கச் செய்து தன்னிடமே தலைவி மயக்கம்
கொள்ளுமாறு
வஞ்சனை செய்த தலைவன்பின்னே, கொடிய பாலைவழியிலே
என்மகள்
அவனோடு உடன்போக்குச் சென்று எத்தகைய துணிச்சலான
செயல்
செய்துவிட்டாள்!" என்று நல்வினை இல்லாத நான் அறியாது
மயங்குகிறேன்.
நீ கண்ணீர் விடுத்துக்கொண்டிருக்கிறாயே? அவள் செய்த
செயலுக்கு நீ யாது
செய்தல் இயலும்!]
75 |