நற்றாய் பாங்கியர் தம்மொடு
புலம்பல்:
புறம்தாழ் புரிகுழல் பூவைதன் பாவை புனை அலங்கல்
சிறந்தான் ஒருவள்ளல் செங்கைய தாம்எனத் தெய்வம்தொழாள்
அறம்தான் நிலைபெற்று அரும்பழி காக்கும் அறிவுநெஞ்சில்
பிறந்தால் அருஞ்சுரம் பின்செல்ல வேண்டுங்கொல் பேதையரே.
அம்பி. 393
எனவும்,
[தலைவி, தன்பாவைக்கு அணிவிப்பதற்குத் தலைவன் ஒருவன்
மாலை
ஒன்று
தந்தானாக, அதனை ஏற்று அவனைத் தவிர வேறு
தெய்வத்தைத்
தொழமாட்டாள். அறத்தில் நிலைபெற்றுப் பெரும்பழி தம்கண்
வாராமல்
பாதுகாக்கும் அறிவு தம்மனத்தில் ஏற்பட்டால், அதற்காகப்
பெண்கள் தம்
தலைவர்பின்னே பாலைநிலத்தில் போதல்வேண்டுவதோ?]
அயலார் தம்மொடு புலம்பல்:
யாழ்இயல் மென்மொழி வன்மனப்
பேதைஒர் ஏதிலன்பின்
தோழியைநீத்துஎன்னைமுன்னேதுறந்துதுன்னார்கள்முன்னே
வாழிஇம் மூதூர் மறுகச்சென் றாள் அன்று மால்வணங்க
ஆழிதந் தான்அம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே.
திரு. 230
எனவும்,
[யாழ்போன்ற மென்மொழியையும் வன்மனத்தையும் உடைய சிறுமி
ஓர்
அயலான்பின், தோழியை நீத்து, என்னை அதற்கு முன்னே துறந்து,
பகைவர்முன்னே ஊரவர் அலர் தூற்ற, திருமாலுக்குச் சக்கராயுதம் வழங்கிய
சிவபெருமானுடைய சிற்றம்பலம் பணியாத தீவினையாளர் செல்லக்கூடிய
கொடிய பாலைவனத்தை அடைந்தாள்.]
தத்தையொடு புலம்பல்:
கொன்நுனைவேல் அம்பலவன் தொழாரின் குன்றம்கொடியோள்
என்னணம் சென்றனள் என்னணம் சேரும் என அயரா |