596இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

        [சிறந்த ஐங்குணங்களால் மேம்பட்ட, சேஷ்டையின் வாகனமாகிய
காக்கையே! ஐந்து படங்களையும் எடுத்து ஆடும் பெரிய பாம்பினைக்
கச்சாகக் கட்டிய சிவபெருமான் தில்லையைப்போன்ற, தலைவன்
தொடர்புகொண்ட, என்மகளும் அவள் கணவனும் இப்பொழுதே வருமாறு நீ
ஒலிப்பாயானால், உணவைக் கவலையின்றி உண்ணலாம். உனக்கு நிறைய
உணவு இடுகிறேன்.

        குணங்கள் ஐந்து--மறைந்த புணர்ச்சித்தாதல், கலங்காமை, பொழுது இறவாது இடம்புகுதல், நெடுகக்காண்டல், மடியின்மை என்பன.]


தலைவன் மிகஅன்பு செய்கஎன்று தெய்வத்திற்குப் பராவுதல்:


        ‘ஈன்றுபுறந் தந்த எம்மும்உள்ளாள்
        வான்தோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
        தனிமணி இரட்டும் தாள்உடைக் கடிகை
        நுழைநுதி நெடுவேல் குறும்படை மழவர்
        முனைஆத் தந்து முரம்பின் வீழ்த்த
        வில்ஏர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
        வல்லாண் பதுக்கைக் கடவுள் பேண்மார்
        நடுகல் பீலி சூட்டித் துடிபடத்
        தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
        போக்குஅருங் கவலைய புலவுநாறு அருஞ்சுரம்
        துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்துஅணிந்து
        ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத்தன்
        மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல
        துஞ்சா முழவின் கோவல் கோமான்
        நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறைப்
        பெண்ணைஅம் பேரியாற்று நுண்அறல் கடுக்கும்
        நெறிஇருங் கதுப்பின்என் பேதைக்கு
        அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே.

அகநா. 35

எனவரும்.