நற்றாய் தலைமகள் இளமைத்
தன்மைக்கு
உளம்மெலிந்து இரங்கல் :
வைம்மலர்வாள் படைஊரற்குச் செய்யும்குற்றேவல் மற்றுஎன்
மைம்மலர்வாள்கண்ணி வல்லள்கொல் லாம்தில்லை யான்மலைவாய்
மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தள்என்று எண்ணித்துண்என்று ஒளித்துக்கைம்மல ரால்கண் புதைத்துப் பதைக்கும்எம் கார்மயிலே.
திரு. 233
எனவும்,
[சிவபெருமான் மலைமேல் மலர்ந்த காந்தட்பூவைப் பாம்பு என்று
தவறாக
எண்ணித் திடுக்கிட்டு ஒளிந்துகொள்ளக்கையால் தண்கண்களை
மூடிக்கொண்டு நடுங்கும், கார்கால மயில்போன்ற என்மகள் தலைவனுக்குச்
செய்யத்தக்க குற்றேவல்களைச் செய்யும் ஆற்றல் உடையளோ? அல்லளே!.]
நற்றாய் தலைமகள் அச்சத்தன்மைக்கு அச்சமுற்று இரங்கல்:
நாள்மா தவிமலர் நாறுஇருங் கூந்தல் நடந்தவழிக்
கோள்மாக் குமிறும் கொடுங்குரல் கேட்டொறும் கூர்ங்கணையால்.
வாள்மாமுனைவென்ற வாணன்தென் மாறைமணிவரைவேய்த்
தோள்மான் வெருவுங்கொல் லோஎன்றுஎன் ஆருயிர் சோர்கின்றதே.
தஞ்சை. 338
எனவும்,
[‘வாணன் மாறையை அடுத்த மலையிலுள்ள மூங்கில் போன்ற
தோள்களை
உடைய என்மகள், கூந்தலில் மாதவிப் பூச்சூடிநடக்கும்
வழியில், புலி
முதலியவற்றின் கொடுங்குரல் கேட்குந்தோறும் அஞ்சுவளே'
என்று
என்உயிர்
பதைக்கின்றது.]
தலைமகள் ஆயமும் தாயும்
அழுங்கக்கண்டு காதலின் இரங்கும்
கண்டோர் இரக்கம்:
நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர்
ஆற்றலர் நோக்கொடுஇன்சொல்
தந்துஇங்கு எவையும் தணந்துசென் றாள்எனத் தாள்பணியார் |