மைந்தும்கதமும்தடிந்து
அருள்வாணன்தென் மாறைஅன்னாள் பந்தும்
கழங்கும்எல் லாம்கண்டு வாடும் பயந்தவளே.
தஞ்சை. 339
எனவும்,
[‘பகைவருடைய வலிமையையும் கோபத்தையும் அழிக்கும் வாணன்
தென்மாறை அன்ன தலைவி எம்மை விடுத்துச் சென்றுவிட்டாளே! எங்களை
அன்பொடு பார்த்து இன்சொல் கூறி, மறைவாக இங்குள்ள பொருள்களை
எல்லாம் விடுத்துத் தலைவன் துணையே பெரிதாகச் சென்றுவிட்டாளே'
என்று தோழியர் நொந்தும் கண்ணீர் உகுத்தும் வருந்துகின்றனர். அவள்
விடுத்துச் சென்ற பந்தையும் கழங்குகளையும் கண்டு நற்றாய் வாடுகிறாள்]
செவிலிஆற்றாத் தாயைத் தேற்றல்:
வேயினதோளிமெலியல்விண்ணோர்தக்கன்வேள்வியின் வாய்ப்
பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்து மும்மைத்
தீயினது ஆற்றல் சிரம்கண் இழந்து திசைதிசைதாம்
போயின எல்லைஎல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே.
திரு. 234
எனவும்,
[மூங்கில் போன்ற தோள்களை உடையாய்! வருந்தாதே.
தக்கன் வேள்வியில் தன் புகழைப் பரப்பிய சிவபெருமானைப் பழித்து
மூவகைத் தீயினது ஆற்றலையும் கண்களையும் இழந்து பல திசைகளிலும்
சிதறி ஓடிய தேவர்கள் சென்ற திசைகளின் எல்லைகாறும் சென்று
தலைவியைத் தேடி வருகிறேன்]
முக்கோல் பகவரை வினாதல்:
வெதிர்ஏய் காத்துமென் தோல்ஏய் சுவல்வெள்ளை நூலின்கொண்மூ
அதிர்ஏய் மறையின் இவ் வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக் |