கதிர்ஏய் சடையோன் கரமான்
எனஒரு மான்மயில்போல்
எதிரே வருமே சுரமே வெறுப்பஒர் ஏந்தலொடே.
திரு. 243
எனவும்,
[கையில் மூங்கில் கோலையும் தோளில் மாந்தோலையும் மார்பில்
பூணூலையும், மேகத்தின் ஒலிபோன்ற மறை ஓசையையும் கொண்டு
இவ்வழியாக வரும் அந்தணர்களே! தில்லை அம்பலத்துச் செஞ்சடை
அண்ணலின் கையில் உள்ள மான் போன்ற ஒரு மான்விழியாள்,
பாலைநிலத்தார் தன்னைச் செறிந்துவர, ஒருதலைவனோடு மயில்போல உம்
எதிரே வரக் கண்டீரோ?]
மாவிரதியரை வினாதல்:
சுத்தியபொக்கணத்துஎன்பு
அணிகட்டங்கம்சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி யூர்அம் பலவர்க்குஉற்ற
பத்தியர் போலப் பணைத்துஇறு மாந்த பயோதரத்துஓர்
பித்திதன் பின்வர முன்வரு மோஓர் பெருந்தகையே.
திரு. 242
எனவும்,
[தூய்மையை உடைய பொக்கணத்தையும், எலும்பாகிய அணியையும்,
கட்டங்கம் என்னும் படைக்கலத்தையும், சூழ்ந்த சடையையும், மெய்முழுதும்
மூடியவெண்கோலத்தையும் உடையீர்! சிவபெருமானுடைய பத்தியில்
ஈடுபட்ட
அடியார்போல, தன்இடத்துக் காதலில் பெண் ஒருத்தி பின்னே
வரத்
தலைவன் ஒருவன் முன்னே வருதலைக் கண்டீரோ?]
உய்த்து உணர்வோரை உரைமின்
என்றல்:
முன்னும் கடுவிடம் உண்டதென்
தில்லைமுன் னோன் அருளால்
இன்னம் கடிஇக் கடிமனைக் கேமற்று யாம்அயர
76 |