602இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

மன

மன்னும் கடிமலர்க் கூந்தலைத் தான்பெறு மாறும்உண்டேல்
உன்னுங்கள் தீதின்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே.

திரு. 236

எனவும்,

      [நான்மறை அந்தணரே! உலகைத் துன்புறுத்தும் விடம் உண்ட
சிவபெருமான் அருளால், எங்கள் வீட்டிலேயே எம் பெண்ணின் மணத்தை
யான் முடிக்கும் வாய்ப்பினைப் பெறுதற்கு நல்வினை உண்டாயின்,
ஆராய்ந்து தீதுஇன்றிக் கூறுங்கள்.]

 

மிக்கோர் ஏதுக்காட்டல்:


சுரும்புஇவர்சந்தும்தொடுகடல்முத்தும்வெண்சங்கும்எங்கும்
விரும்பினர்பால்சென்றுமெய்க்கணியாம்வியன்கங்கைஎன்னும்
பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலம்அனைய
கரும்புஅனமென்மொழியாரும் அந்நீர்மையர்காணுநர்க்கே.

திரு 248

எனவும்,

     [சந்தனமும், முத்தும், சங்கும் தாம் பிறந்த இடத்தில் பயன்படாது
விரும்பினவர் இடத்துச் சென்று அவர் உடலுக்கு அழகு தரும். கங்கை
சூடிய சிவபெருமானின் சிற்றம்பலம் அனைய வனப்புடைய கரும்பு அன்ன
சொல்லினிமை உடைய பெண்களும், ஆராய்ந்து பார்ப்பவருக்கு
அத்தன்மையராகவே கொள்ளத்தக்கார்.]


செவிலி எயிற்றியொடு புலம்பல்:


பேதைப் பருவம்பின் சென்றது முன்றில் எனைப்பிரிந்தால்
ஊதைக்கு அலமலரும் வல்லிஒப் பாள்முத்தன் தில்லைஅன்னாள்
எதில் சுரத்து அய லானொடுஇன்று ஏகினாள் கண்டனையே
போதில் பொலியும் தொழில்புலிப் பல்குரல் பொற்றொடியே.

திரு. 239

எனவும்,