அகத்திணையியல்--நூற்பா எண் 166603

      [பூவணிந்து புலிப் பல் சூடிய நங்காய்! என் பெண் என்னைப்
பிரிந்தால் பெருங்காற்றுக்கு அசைந்தாடும் கொடிபோன்ற மென்மையள்.
அவள் பேதைப்பருவம் கடந்த பெதும்பைப் பருவத்தினள்; வடிவால்
சிவபெருமான் தில்லையை ஒத்தவள். அவள், பழக்கம் அறியாத
இப்பாலைவழியில் அயலவன் ஒருவனோடு வந்துவிட்டாள். நீ அவளைக்
கண்டாயோ?]
 

செவிலி குரவொடு புலம்பல்:
 

பாயும் விடையோன் புலியூர் அனையஎன் பாவைமுன்னே
காயும் கடத்திடை ஆடிக் கடப்பவும் கண்டுநின்று
வாயும் திறவாய் குழைஎழில் வீசவண்டு ஓலுறுத்த
நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடு நீள்குரவே.

திரு. 241

எனவும்,

       [உயர்ந்த குராமரமே! சிவபெருமான் புலியூரை அன்னஎன் பெண்

உன் கண் முன்னே கொடிய பாலைவனத்தில் தடுமாறிச் செல்லவும்,
அதனைப்பார்த்தும் நீ வாய் திறவாது இருந்துவிட்டாய். உன் தளிர்கள்

எழில் வீசவும் வண்டுகள் தாலாட்டுப்பாடவும் நீயும் உன்பாவையும்

நிலைபெற்று வாழ்க!


‘வாழ்க' என்பது குறிப்புமொழி.]

 

புறவொடு புலம்பல்:

 

புயல்அன்று அலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி

பயலன் தனைப்பணி யாதவர் போல்மிகு பாவம்செய்தேற்கு
அயலன் தமியன்அஞ் சொல்துணை வெஞ்சுரம் மாதர்சென்றால்
இயல்அன்று எனக்கிற் றிலைமற்று வாழி எழில்புறவே.

திரு. 240

எனவும்,
      [அழகிய புறாவே! கங்கை சூடிய பார்வதிபாகனை வழி

படாதவர்போலத் தீவினை செய்தேனுக்கு மகள், அயலானாகிய தனியானவன்
சொன்ன சொற்களையே துணையாகக்கொண்டு