கொடிய காட்டிடைச் செல்பவளை
நோக்கி, ‘இஃது உனக்கு ஏற்புடைத்தன்று'
என்று நீ கூறவில்லை. நீ வாழ்க!
‘வாழ்க' என்பது குறிப்பு மொழி.]
சுவடு கண்டு இரங்கல்:
தெள்வன் புனல்சென்னியோன் அம்பலம்சிந்தி யார்இனம்சேர்
முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேன்எடுத்த
ஒள்வன் படைக்கண்ணி சீறடி இங்குஇவை உங்குஉவைஅக்
கள்வன் பகட்டுஉர வோன் அடி என்று கருதுவனே. திரு. 237
எனவும்,
[‘சிவபெருமானது சிற்றம்பலத்தை நினையாத பாவியர் சேரும் முள் நிரம்பிய
மேட்டுவழியில் தீவினையேன் பெற்ற வேற்கண்ணியின் சிறிய அடிச்சுவடுகள்
இவை; அங்கு உள்ள அப்பெரிய அடிகள் என் மகளைக் கடத்திச் சென்ற
கள்வனாகிய யானைபோன்ற வலிமையுடைய தலைவன் அடிகள்' என்று
நினைக்கிறேன்.]
கலந்து உடன்வருவோர்க் கண்டு
கேட்டல்:
பைந்தார் விடலையும் நீயும்
தகஇப் பரிசுஎதிரே
வந்தார் சிலர்உள ரோமக ளேவண்டல் ஆடும்அந்தண்
சந்துஆர் தடமுலை ஆயமும் தாயரும் தான்வளர்த்த
செந்தார் மழலைக் கிளியும்என் போல்இன்று தேடவைத்தே,
அம்பி. 405
எனவும்,
[மகளே! உன் கணவனும் நீயும் போல உங்களுக்கு எதிரே, தன்னுடன்
விளையாடும் தோழியர்குழாமும், தான் வளர்த்த சிவந்த கழுத்துக்கோடுடைய
மழலை பேசும் கிளியும் என்னைப்போல இன்று தங்களைத் தேடுமாறு
வைத்துச் சிலர் வந்ததைக் கண்டாயா?] |