| 
       
       கலந்து உடன்வருவோர் புலம்பல் 
      தேற்றல்: 
      
       
      
      
      மீள்வது செல்வதன்று அன்னைஇவ் வெங்கடத்து அக்கடமாக் 
      கீள்வது செய்த கிழவோனொடும்கிளர் கெண்டைஅன்ன 
      நீள்வது செய்தகண் ணாள்இந் நெடுஞ்சுரம் நீந்திஎம்மை 
      ஆள்வது செய்தவன் தில்லையின் எல்லை அணுகுவரே. 
      
      திரு. 247 
      
      
      எனவும், 
      
       
           
      [அன்னையே! இக்கொடிய பாலையிலே அப்பெரிய யானையைப் 
      பிளந்த
      தலைவனும் கெண்டைக் கண்ணாளும் நீண்ட இப்பெரிய பாலையை 
      நீந்தி
      எம்மை ஆட்கொண்ட சிவபெருமானுடைய தில்லையின் எல்லையை 
      இந்நேரம் அடைந்திருப்பர். ஆதலின் இனிச்சென்று அவர்களைக் காண்டல் 
      உனக்கு இயலாது. திரும்பிப் போதலே உனக்கு ஏற்றது.] 
      
      
       
      செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல்: 
      
       
       கல்லார் சுரத்து வருவார் இருவரைக் கண்டஎல்லை 
 எல்லாம் அவரவர் என்றிருந் தேன்அவர் எம்இருவர் 
       அல்லா நிலைமை அருவினை யேன்இங்கு அறிந்தபின்னும் 
       செல்லாது மீண்டுஒரு கால்இரு காலும்என் சிந்தையுமே. 
  
      
      அம்பி. 407 
      
      
      எனவும் வரும். 
      
       
           
      [கல்மிக்க பாலையிலே சேய்மையில் வருவார் இருவரைக் கண்டு 
      என்மகளும்
      அவள் தலைவனுமே என்று நினைத்தேன். அண்மையில் 
      வந்தபின், அவர்கள்
      என்மகளும் அவள் தலைவனும் அல்லர் என்ற 
      நிலைமையைத் தீவினையேன்
      அறிந்த பின், இனி என் மனமும் கால்களும் 
      ஓர் அடிகூட மேற்செல்ல
      மறுக்கின்றன. கவலையால் யான் செயலறவு 
      பட்டுள்ளேன்.] 
       
           
      இவற்றுள், வினவிய பாங்கியின் உணர்ந்தகாலை இனையல் 
      என்போர்க்கு
      எதிர் அழிந்து இரங்கல் முதலிய மூன்றும் செவிலி 
      புலம்பற்கும்,  |