606இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

செவ

     செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில் பாங்கிதன்னொடு புலம்பல்
முதலிய நான்கும் நற்றாய் புலம்பற்கும்,

     நிமித்தம் போற்றல் முதலிய ஐந்தும் மனைமருட்சிக்கும்,

     கண்டோர் இரக்கம் ஆகிய ஒன்றும் கண்டோர் இரங்கற்கும்,

     ஆற்றாத் தாயைத் தேற்றல் முதலிய ஒன்பதும் செவிலி பின்
தேடிச்சேறற்கும் உரியவாம் எனக்கொள்க.

166

மீட்சி வகை


539    தெளித்தல்1 மகிழ்ச்சி2 வினாதல்3 செப்பல்4
       வெளிப்பட உரைத்த மீட்சிநால் வகைத்தே.


      மீட்சி கூறுவனவற்றுள் இஃது அதன்வகை இத்துணைத்து
என்கின்றது.

     (இ-ள்) தெளித்தல் முதலாகச் செப்பல் ஈறாக நான்கு வகையினை
உடைத்தாம் மீட்சி என்றவாறு.

167


விளக்கம்


1, நிகழ்ச்சியைத் தெளிவாகக் கூறுதல்.


2, தலைவி மீண்டுவருதலால் பலருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி.


3, நற்றாய் வேலனை வினவுதல்.


4, மகிழ்ச்சியை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொள்ளுதல்.

ஒத்த நூற்பாக்கள்


முழுதும்--                                           ந. அ. 190


‘உடன்கொடு போய உரவோன் தன்மனை
    மடந்தையை வரைதல் வரையாது அவள்மனை
  மீண்டு வரைதல்முன் வேள்விசெய் ததனை