ஆண்டகை உணர்த்துஎன அறிவுடைப்
பாங்கி
பூண்டுணர்த் தினன்எனல் பொன்னகர் அடைந்தபின்
மீண்டு அவளுடன் உறல் மீட்சிநால் வகைத்தே.'
மா. அ. 90
167
மீட்சியின் விரி
540 தலைவிசேண் அகன்றமை செவிலிதாய்க்கு உணர்த்தலும்1
தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றலும்2
தலைவிமுன் செல்வோர் தம்மொடு தம்வரல்
பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும்3 அங்குஅவர்
பாங்கியர்க்கு உணர்த்தலும்4 பாங்கியர் கேட்டு
நற்றாய்க்கு உணர்த்தலும்5 நற்றாய் கேட்டு அவன்
உளங்கொள வேலனை வினாதலும்6 எனஉடன்
விளம்பிய இருமூன்றும் மீட்சியின் விரியே.
இது மீட்சியின்விரி இத்துணைத்து என்கின்றது.
(இ-ள்) தலைவி சேண்அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தல் முதலாக
நற்றாய் தலைமகன்
உளம்கொள வேலனை வினாதல் ஈறாகச் சொல்லப்பட்ட
ஆறும் மீட்சியின் விரியாம். என்றவாறு.
ஒன்றென முடித்தலால், உடன்போய் வரைந்த நெடுந்தகை மீட்சி
உரைத்தலும் வரப்பெறும்.
விளக்கம்
1, தலைவி தலைவனுடன் அவன்ஊர் சென்றாள் என்பதனைச் செவிலி
நற்றாய்க்கு உரைத்தல்.
2, மீண்டு வரும் தலைவன் தலைவியின் ஊரை அடைந்துவிட்ட செய்தியை
அவளிடம் கூறல்.
3, தலைவி தம்முன் செல்வோர்களை அழைத்துத் தானும் தலைவனும்
வருதலைத் தோழயிர்களுக்குச்
சொல்லி விடுத்தல். |