608இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

4 முன

4  முன்சென்ற சான்றோர், அவர் வருகையைப் பாங்கியருக்குத்

   தெரிவித்தல்.

5,  தலைவனும் தலைவியும் மீண்டுவரும் செய்தியைப் பாங்கியர் கேட்டு
   நற்றாய்க்குத் தெரிவித்தல்.

6,  ‘தலைவன் தலைவியைத் தன் மனைக்கு அழைத்துக் கொண்டு
    செல்வானோ? அல்லது எம்மனைக்கே அழைத்துக்கொண்டு
    வருவானோ?' என்று பூசாரியை நற்றாய்கேட்டல்.

ஒத்த நூற்பாக்கள்


    முழுதும் --                                      ந. அ. 191


    ‘இறைவனைப் பயந்தவள் எமர்இல் வரைந்தமை
    இறைவிநற் றாய்உற எய்து அவண் என்றலும்
    இறைவிஊர் சார்ந்தமை இறைவன் சாற்றலும்
    தலைவிமுன் செல்வோர் தம்மொடு தன்வரவு
    இகுளையர்க்கு உணர்த்தி விடுத்தலும் இகுளையர்க்கு
    ஆங்குஅவர் உணர்த்தலும் பாங்கியர் உணர்ந்து
    நற்றாய்க்கு உணர்த்தலும் நற்றாய் உணர்ந்துஅவன்
    உளம்கொள வேலனை வினாதலும் எனஉடன்
    விளம்புஇரு மூன்றும் மீட்சியின் விரியே'. மா. அ. 91]

தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தல்:

சேடுஆர் மலர்க்குழல் வல்லியை அன்னைவெந் தீவினையேன்
நாடா வயின்இல்லை ஞாலத்து அகவயின் நன்கமலக்
காடார் பழனக் கழனிநன் னாடு கடந்துதன்ஊர்
வாடா வளமனைக் கொண்டுசென்றான் ஒரு வள்ளல்இன்றே.

அம்பி. 408

எனவும்,

     [அன்னையே! மலர்க்குழற்கொடியாகிய தலைவியை, உலகம் முழுதும்,
நல்வினையற்ற நான் தேடாத இடம் இல்லை. கமலக்காடு போன்ற
குளங்களையும் வயல்களை உடைய நல்ல