அகத்திணையியல்--நூற்பா எண் 168609

நாட்டைக் கடந்து, ஒரு வள்ளல், அவள் வருந்தாத வகையில் தன்
ஊரிலுள்ள தன் செல்வமனைக்கு இன்றே கொண்டு சென்றுவிட்டான்.]

உடன்போய் வரைந்த நெடுந்தகை மீட்சி உரைத்தல்:


அனைத்தாயதன்நகர் ஆன்றபொன் மாளிகைச் சான்றவர்முன்
எனைத்தாய பல்கிளை ஏத்த மணம்புரிந்து இன்புறும்நாள்
மனைத்தாயர்தந்தைதன்ஊர்வண்டல் ஆயம்மறந்தஎல்லாம்
நினைத்தாள் நிரைவளைமீண்டான் அறிந்துநெடுந்தகையே.

அம்பி. 409

எனவும்,

      [அத்தகைய சிறப்புள்ள தன் ஊரிலே தன் பொலிவுற்ற பேரில்லிலே
சான்றவரும் தன் சுற்றத்தவரும் ஏத்தத் தலைவியைத் திருமணம்
செய்துகொண்டு இன்புறும் நாளிலே, நிரைவளைத் தலைவி தன் ஊர் வீடு
தாயர் தந்தை தோழியர் ஆகியவர் பற்றி மறந்திருந்ததை எல்லாம்
நினைத்தாளாக, அவள் நினைப்பை உணர்ந்து, தலைவன் அவளுடன்
அவள் ஊருக்கு மீண்டான்.]

       தலைவன் தம்ஊர் சார்ந்தமை சாற்றல்:

துப்புஓது சேயிதழ்த் தூநகை யாய்வெம் சுரத்திடைநாம்
அப்போது இருந்த அகன்பொழில் ஆயத்துஉன் ஆரமுலைக்கு
ஒப்புஓ தியமென் முகைக்கன்னி காரம்இம் முற்றத்துநீ
எப்போதும் வைகும் இளமரக் காவும் இலஞ்சியுமே,

அம்பி. 410

எனவும்,

     [பவள இதழ்களையும் தூய பற்களையும் உடையாய்! நாம்
உடன்போக்கு வந்தகாலைப் பாலைநிலத்தில் நாம் தங்கி
இளைப்பாறியபொழுது உன் முலைக்கு ஒப்பாகக் கூறப்பட்ட
77