அரும்புகளை உடைய கோங்கமரம்
இது. நீ எப்போதும் தங்கும் இளமரச்
சோலையும், குளிக்கும் இதோ காட்சி அளிக்கின்றன.]
தலைவி
முன் செல்வோர் தம்மொடு
தம்வரல்
பாங்கிக்கு உணர்த்தல்:
ஒன்றே உளம்கொண்டு இருபிறப்பு எய்திமுத் தீயும்உய்த்து
நன்றே நவில்கின்ற நான்மறை யீர்தம்மை நான் அகன்ற
அன்றே தொடங்கி அலமலரும் ஆயத்து அரிவையர்க்குச்
சென்றே வருவது உரைமின்கள் யாம்அத் திருநகர்க்கே.
அம்பி. 411
எனவும்,
[தெய்வம் ஒன்றையே மனத்துக் கொண்ட இருபிறப்பாளராய்
முத்தீயும் ஓம்பி
நல்லனவற்றையே பேசும் நான்மறை அந்தணீர்! தம்மை
நான் பிரிந்த
அன்றுதொடங்கி மனம் சுழலும் ஆயத்தாருக்கு யாம் அவர்கள்
ஊருக்கு மீண்டு வரும் செய்தியைச் சென்று சொல்லுங்கள்]
முன்செல்வோர் பாங்கியர்க்கு
உணர்த்தல்:
நண்போடு இனியதுஓர் நல்விருந்து
எய்துவிர் நாளைஎல்லைத்
தண்போது அணிகுழல்தையல் நல்லீர்செய்யதண்தமிழ்தோய்
பண்போல் இனிய பணிமொழிச் செந்தளிர்ப் பைந்தொடிதன்
கண்போல் ஒருவர் கலந்துஉடன் மீள்வது கண்டனமே.
அம்பி 412
எனவும்,
[தையல் நல்லீர்! தமிழ்ப்பண்போல் இன்மொழித் தையலுடன்
கண்போன்று
இனிய ஒருவன்கூடி உடன்மீளும் காட்சியை யாம் கண்டோம்.
நாளை
விருப்பத்தோடு இனியதொரு நல்விருந்தை நீங்கள் பெறுவீர்
என்பதை மனங்கொள்ளுங்கள்.]
|