அகத்திணையியல்--நூற்பா எண் 168611

 பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தல்:


மேவிஒன் னார்எம்மை மெய்த்துணை போக விடுத்திருந்த
பாவிஎன் னாவகை பாக்கியம் செய்தனம் பாய்அரிக்கண்
காவிஅன் னாள் அருங் கானகம் நீந்திநம் மாநகர்வாய்
ஆவிஅன் னாருடன் வந்தனள் காண்என்பர் அந்தணரே.

அம்பி. 413

எனவும்,

     [பகைவர்கள் எங்களைத் ‘தலைவியைத் துரத்திவிட்டுத் தனியே வாளா
இருக்கும் பாவிகள்' என்று அலர் தூற்றாதபடி நாங்கள் பாக்கியம்
செய்துவிட்டோம். இங்கு வந்த அந்தணர்கள் குவளைக்கண்ணளாகிய தலைவி அரிய காட்டைத் தன் உயிர்போன்ற தலைவனுடன் கடந்து நம் வீடு நோக்கி வரும் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்கள்.]

நற்றாய் தலைமகன் உளம்கொள வேலனை வினாதல்:
 

தென்மாறை நன்னகர் மன்னவன் வாணன்செழுந்தஞ்சைசூழ்
பொன்மா திரத்துப் புலன்உணர் வீர்சுரம் போய்வருவோன்
என்மா தரைஎன் மனைத்தரு மோதன்னை ஈன்றநற்றாய்
தன்மா மனைஉய்க்கு மோசொல்லுவீர் ஒன்று தான்எனக்கே.

தஞ்சை. 354

எனவும் வரும்.

      [வாணன் தஞ்சையைச் சூழ்ந்த நான்குதிசைகளிலும் மேல் நிகழக்கூடிய செய்திகளை உணரும் வேலனே! ‘பாலை நிலத்திற்கு என் பெண்ணை உடன்போக்கி மீளும் தலைவன், முதற்கண் அவளை என் மனைக்கு அழைத்து வருவானோ? அல்லது தன் தாய் இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் செல்வானோ? என்பதனை எனக்கு விளக்கிச் சொல்லுக.]

     இவற்றுள், தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தலும்
தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றலும் ஆகிய இரண்டும் தெளித்தற்கும்,