612இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

     தலைவி முன் செல்வோர் தம்மொடு தம்வரல் பாங்கியர்க்கு உணர்த்தி
விடுத்தலும் பாங்கியர் நற்றாய்க்கு உணர்த்தலும் ஆகிய இரண்டும்
மகிழ்ச்சிக்கும்,

    நற்றாய் தலைமகன் உளம் கொள வேலனை வினாதலாகிய ஒன்றும்
வினாதற்கும்,

    முன்செல்வோர் பாங்கியர்க்கு உணர்த்தல் ஆகிய ஒன்றும் செப்பற்கும்
உரியவாம்

168


மீட்சியுள் வரைதற்கு உரியன


541   மடந்தையை உடன்போய் வரைந்து மீடற்கும்
     அவள்மனை வரைதற்கும் தன்மனை வரைதற்கும்
     இயைதலும் உரிய செவிலிகூற்று ஒழித்தே.


    இது மேல்கூறியவற்றுள் வரைதற்கும் உரியன இவை என்கின்றது.

      (இ-ள்) மடந்தையை உடன்போய் வரைந்துமீடற்கும் வரையாது
மீண்டு அவள்மனையின்கண்ணே ஆதல் தன்மனையின்கண்ணே ஆதல்
வரைந்து கோடற்கும் இலக்கணத்தான் உரியவாம், செவிலி கூற்றாகிய
ஒன்றையும் ஒழித்து அல்லாத ஐந்தும் என்றவாறு.

 169


ஒத்த நூற்பா

 

        முழுதும்--                                  ந. அ. 192

169


தன்மனை வரைதலின் வகை


542     வினாதல்1 செப்பல்2 மேவல்3 என்று இறைவன்
        தனாதுஇல் வரைவு தான்மூ வகைத்தே.


     தன்மனை வரைதல் கூறுவனவற்றுள் இஃது அதன்வகை இத்துணைத்து
என்கின்றது.