(இ-ள்) வினாதலும் செப்பலும்
மேவலும் என மூவகையினை
உடைத்தாம், தலைவன் மீண்டுவந்து தன்மனையின் கண்ணே வரைதல்
என்றவாறு.
170
விளக்கம்
1 நற்றாய் செவிலியை வினாதல்.
2
செவிலி நற்றாய்க்கு விடை கூறுதல்.
3
தலைவனும் தலைவியும் தலைவியின் இல்லத்தை அடைதல்.
ஒத்த நூற்பா
முழுதும்--
ந. அ. 193
170
தன்மனை வரைதலின் விரி
543 பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின்
செவிலியை வினாதலும்1 செவிலிக்கு இகுளை
வரைந்தமை உணர்த்தலும்2 வரைந்தமை செவிலி
நற்றாய்க்கு உணர்த்தலும்3 உற்றுஆங்கு இருவரும்
தலைவிஇல் வந்துழித் தலைவன் பாங்கிக்கு
யான்வரைந் தமைநுமர்க்கு இயம்புசென்று என்றலும்4
தான்அது முன்னே சாற்றியது உரைத்தலும்5
என்னும்இவ் வைந்தும் மின்நிலை வேலோன்
மன்னிய தன்மனை வரைதலின் விரியே.
இது தன்மனைவரைதலின் விரி இத்துணைத்து என்கின்றது.
(இ-ள்) பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின் செவிலியை
வினாதல் முதலாகப் பாங்கி தான் அது முன்னே சாற்றியது உரைத்தல்
ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் மீண்ட தலைமகன் தலைமகளைத் தன்
மனையின்கண்ணே வரைந்து கோடலின் விரியாம் என்றவாறு. |