614இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

விளக்கம்


1,   நற்றாய் தன்மகள் மணத்தைத் தன் இல்லத்தில் நிகழ்த்துதல்

    வேண்டும் என்ற விருப்பத்தில் செவிலித்தாயை வினவுதல்.

2,   செவிலித்தாய்க்குத் தோழி தலைவன் மணம்செய்து கொண்டதனைக்
    குறிப்பிடுதல்.

3,   மணம் செய்து கொண்டதைச் செவிலி நற்றாய்க்கு உரைத்தல்.

4,   தலைவனும் தலைவியும் தலைவிவீட்டிற்கு வந்தவழித் தலைவன்
    தோழியிடம் தான் தலைவியை மணந்து கொண்ட செய்தியைத்
    தலைவிதமருக்குத் தெரிவிக்குமாறு குறிப்பிடுதல்.

5,   தோழி ‘நான் அதனை முன்னமேயே கூறிவிட்டேன்' என்று    

     தலைவனிடம் கூறுதல்.


ஒத்த நூற்பாக்கள்
 

      முழுதும்--                                  ந. அ. 194


      ‘கவின்உடை நற்றாய் கடிமணம் நிகழ்தற்குச்
      செவிலியை வினாதலும் செவிலிக்கு இகுளை
      வரைவு நிகழ்ந்த வாய்மை உணர்த்தலும்
      புரைதீர் செவிலி பொற்பநற் றாய்க்குத்
      திருமணம் நடந்த செவ்வி உணர்த்தலும்
      இருவரும் தலைவி இல்செல இறைவன்
      யான்வரைந் தமைநுமர்க்கு இயம்புஎன இகுளை
      தான்அது முன்னர்ச் சாற்றியது உணர்த்தலும்
      என்ன வரன்முறை இயம்பிய ஐந்தும்
      மன்னன் தன்மனை வரைந்ததன் விரியே.'

மா. அ. 92]