அகத்திணையியல்--நூற்பா எண் 171615

 பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின்
செவிலியை வினாதல்:


தாமாக மேவினும் நம்மனைக் கேவந்து தண்சிலம்பர்
மாமா தினைமணம் செய்வதற் கேமரு வார்கமலப்
பூமாது கேள்வன் புகழ்த்தஞ்சை வாணன் பொருப்பில்இனி
ஆம்ஆறுஉயிர் அனையாய்சொல்வமோ அவர் அன்னையர்க்கே.

தஞ்சை. 355


எனவும்
,

     [தோழி! தாமாக உடன்போன தலைவன் தலைவியோடு திரும்பி
வந்தாலும், நம் வீட்டிற்கே வந்து நம் மகளை மணம் செய்வதற்குத்
தஞ்சைவாணன் மலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுமாறு தலைவனுடைய
அன்னைமாரிடம் சென்று வேண்டிக்கொள்வோமா?]


செவிலிக்கு இகுளை வரைந்தமை உணர்த்தல்:


என்நாம்இயம்புவதுயாய்க்குஇனிநாம்அன்னைஇன்றுதம்மில்
கொன்ஆரும்நித்திலிக்கோவை நம்மாதைக்கொடிநெடுந்தேர்க்
கன்னாடர்மண்கொண்டவாணன் தென்மாறையில்காதலர்தாம்
நன்னாள் மணம்புணர்ந் தார்என்று தூதர் நவின்றனரே.

தஞ்சை. 356

எனவும்,

     [அன்னையே! பொன்னோடு முத்துவடம் பூண்ட நம் தலைவியை,
கருநாடரை வென்றவாணனுடைய தென்மாறையில் தலைவன் நல்ல நாளில்
மணம் செய்துகொண்டு விட்டான் என்று தூதர்கள் கூறினர் ஆதலின், நாம்
நற்றாய்க்கு என்ன சொல்லுவது?]
 

வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தல்:
 

எனைக்கே ளிரும்நின்று இயற்றஅங் கேமண இன்பம்எய்தி
அனைக்கேண்மை நண்ணிய அண்ணல்பின் னாகநம் அன்னை இன்று இம்