மனைக்கேவரும்எனவந்துசொன்னார்
தஞ்சைவாணன்வெற்பில்
சுனைக்கேழ் மலர்க்கழு நீர்க்குழ லாய்சில தூதர்முன்னே.
தஞ்சை. 357
எனவும்,
[தஞ்சைவாணன் மலைச்சுனைக் கழுநீரைச் சூடிய குழலாய்!
‘உறவினர்
புடைசூழ அவ்வூரில் திருமணம் செய்து கொண்டு தலைவியோடு
தொடர்பை
உறுதிப்படுத்திக் கொண்ட தலைவன்பின்னே நம் பெண்ணாகிய
தலைவி
இன்று நம் வீட்டிற்கு வருவாள்' என்று சில தூதர்கள் வந்து
முற்படத்
தெரிவித்துள்ளனர்.]
உற்றுஆங்கு
இருவரும் தலைவிஇல்
வந்துழித் தலைவன்
பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு என்றல்:
ஓங்கும் பலவும் கதலியும்
சூழும்எம் ஊர்வயின்போய்ப்
பாங்குஒன் றியசெழும் பாவகன் முன்னர்ப் பணிமொழியாய்
வாங்கும் சிலைநுதல் மடந்தைக்கு மங்கல நாண்புனைந்தது
ஈங்குஉன் பெருந்தமர் யாவர்க்கும் நீசென்று இயம்புகவே.
அம்பி. 416
எனவும்,
[பணிமொழித் தோழியே! பலாவும் வாழையும் சூழ்ந்த எம் ஊருக்குப்
போய், என்றும் துணையாக உதவும் அக்கினிக்குமுன், வில்போன்ற
நெற்றியை
உடைய தலைவிக்கு மங்கலநாண் புனைந்து யான் அவளை
மணந்து
கொண்ட செய்தியை உன் உறவினர் யாவருக்கும் சென்று
தெரிவிப்பாயாக.]
தான் அது முன்னே சாற்றினன்
என்றல்:
அன்னைக்கியம்பினன் ஆண்
தகையான்முன் அறிந்துதென்னன்
தன்னைப் பணிந்துகுற் றேவல்செய் யாது சமர்எதிர்ந்த |